Last Updated : 06 Apr, 2018 10:37 AM

 

Published : 06 Apr 2018 10:37 AM
Last Updated : 06 Apr 2018 10:37 AM

ஆடுகளைத் தின்று மனிதனுக்கு காத்திருந்த சிறுத்தைப்புலி: தப்பித்த பெண்ணின் கதை

மகாஷ்டிரா மாநிலம் பண்டாரா மாவட்டத்தில் சிறுத்தைப் புலியின் தாக்குதலுக்கு உள்ளான 21 வயதுப் பெண்ணின் சாகசக் கதை இது...

ரூபாலி மேஷ்ரம், பி.காம் படித்தவர், இவர் பண்டாரா மாவட்டத்தில் தனது உஸ்கான் எனும் கிராமத்தில் வசித்து வந்தார். சிறுத்தைப் புலியின் தாக்குதலுக்கு ஆளானத்திலிருந்து சிகிச்சைப் பெற்று வந்தார். தலை, கால்கள், இடுப்பு ஆகிய இடங்களில் காயங்கள் ஆறிய பிறகு தற்போது அவர் மீண்டு வந்துள்ளார்.

இனி ரூபாலியே தான் உயிர்பிழைத்த கதையைச் சொல்கிறார்:

நள்ளிரவில், வீட்டை ஒட்டியே அமைந்துள்ள பட்டியில் கட்டிப்போட்டிருந்த ஆடுகள் திடீரென சத்தம்போடுவது கேட்டது. இதனால் உறக்கத்திலிருந்து கண்விழித்தோம். அங்கே என்ன நடக்கிறது என்பதை அறிய தொழுவத்தினுள் சென்று பார்த்தோம். ஆனால் அவர் அங்கு பார்த்த காட்சி... மிகவும் கொடுமை,

நான் வளர்த்த ஆடுகள் அங்கே ரத்த வெள்ளத்தின் நடுவே இறந்துகிடந்தன.

என்ன நடந்திருக்கும் என்று யோசிப்பதற்குள்ளாகவே அந்த ஆடுகளைக் கொன்று தின்ற புலி பின்னிருந்து என்மீது பாய்ந்தது. என் கையிலிருந்து கழியால் அதை அடித்தேன். ஏசு கிறிஸ்துவை வணங்கினேன். அந்நேரம் சத்தமிட்டு தாயை அழைத்தேன்.

நல்லவேளையாக எனது அம்மா உதவிசெய்ய ஓடிவந்தார். அந்த புலி உடனே என் தாயார் மீது பாய்ந்து தொடங்கியது. இருப்பினும், எனது தயார் தனது கையிலிருந்த கழியால் பலங்கொண்ட மட்டும் ஓங்கி அடித்தவர், புலியிடமிருந்து என்னை படுவேகமாக வீட்டுக்குள் இழுத்துக்கொண்டு கதவை தாழிட்டார்.

பின்னர் நாங்கள் எனது தாயார் அவரது சகோதரரை (என்னுடைய தாய்மாமன்) தொலைபேசியில் அழைத்தார். அவர் அருகிலுள்ள சோனகானில் வசித்துவருகிறார். அவர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து விட்டு எங்கள் வீடு நோக்கி விரைந்தார்.

என்று தான் உயிர் பிழைத்த கதையை படபடவென்று சொல்லும் ரூபாலி பின்னர் வனத்துறை அதிகாரிகளும் வந்து சேர்ந்தததையும். பண்டாரா மருத்துவனைக்கு கொண்டு சென்று சேர்த்ததையும், பின்னர் அங்கிருந்து நாக்பூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதையும் ஒரு சாகசக் கதைக்கான வேகத்தோடு சொல்லிமுடித்தார்.

சிகிச்சை செலவினங்கள் பற்றி கேட்டபோது, சிறிது தயக்கத்திற்குப் பிறகு கூறுகையில், சிகிச்சை செலவினங்களுக்கான பணத்தை செலுத்துவது குறித்து, வனத்துறையிடமிருந்து இதுவரை எந்தவித நிதி உதவியும் கிடைக்கவில்லை. சிக்சைக்கான பணம் திரட்டுவதற்காக தனது தாய்தான் நகைகளை விற்று அதில் கிடைத்த பணத்தைக்கோண்டு மருத்துவனையில் பணம் செலுத்தினார்'' என்றார்.

இதுகுறித்து பண்டாரா துணை வனப்பாதுகாவலர் விவேக் ஹோஷிந்த் கூறுகையில், ‘‘தன்னை வந்து தாக்கியது ஒரு புலி என்று சொன்னார். அப்படியிருக்க வாய்ப்பில்லை. அவர்கள் வீட்டருகே காணப்பட்ட காலடித்தடங்கள் சிறுத்தைப்புலியின் காலடித்தடங்களே ஆகும். தவிர, அந்தப் பகுதியில் புலிகள் நடமாட்டம் குறித்த எந்த பதிவுகளும் கிடையாது'' என்றார்.

ஹோஷிந்த் மேலும் கூறுகையில், ‘‘வனத்துறை ரூபாலிக்கு 12 ஆயிரம் பணம் தந்துள்ளது. மருத்துவச் சான்றிதழ் பெறுவதற்கான அனைத்து நடைமுறைகளும் முடிந்தபின்னர் அவருக்கு மேலும் உரிய இழப்பீடு வழங்கப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x