Last Updated : 06 Apr, 2018 08:19 AM

 

Published : 06 Apr 2018 08:19 AM
Last Updated : 06 Apr 2018 08:19 AM

மலையாள நடிகர் கொல்லம் அஜீத் காலமானார்

மலையாள வில்லன் நடிகர் கொல்லம் அஜீத் (56), கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று காலமானார்.

1980-களில் மலையாள திரையுலகில் நுழைந்த கொல்லம் அஜீத் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மலையாளம் தவிர தமிழ், தெலுங்கு மற்றும் இந்திப் படங்களிலும் நடித்துள்ளார். வயிறு தொடர்பான பிரச்சினைகளுக்காக இவர் அண்மைக்காலமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை 3.40 மணிக்கு இயற்கை எய்தினார். இருவருக்கு மனைவியும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

கொல்லம் அஜீத்தின் உடலுக்கு, மலையாள திரையுலகை சேர்ந்த பலர் அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் கொல்லம் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு இன்று இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x