Last Updated : 20 Mar, 2018 05:27 PM

 

Published : 20 Mar 2018 05:27 PM
Last Updated : 20 Mar 2018 05:27 PM

இரு சக்கரவாகனத்தில் செல்பவர்களுக்கு தலைக் கவசம் மிகவும் முக்கியம் என்பது உங்களுக்கு தெரியும்:நிதின் கட்கரிக்கு சச்சின் டெண்டுல்கர் கடிதம்

உயிர்காக்கும் கவசமான ஹெல்மட்களை தரமற்ற முறையில், போலியாகவும் தயாரிக்கும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மத்திய சாலைபோக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு கிரிக்கெட் வீரரும் எம்.பி.யுமான சச்சின் டெண்டுல்கர் வலியுறுத்தியுள்ளார்.

சாலையில் இருசக்கரவாகனத்தில் செல்பவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை சச்சின் டெண்டுகல்கர் தீவிரமாக வலியுறுத்தி வருகிறார், அது தொடர்பாக பிரசாரங்களும் செய்து வருகிறார். ஆனால், சில போலி நிறுவனங்கள் தயாரிக்கும் ஹெல்மெட்களை நம்பி வாங்கும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் போது ஹெல்மெட் அணிந்திருந்தும் உயிரிழக்கவேண்டிய சூழல் நிலவுகிறது.

இது தொடர்பாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு சச்சின் டெண்டுல்கர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

இரு சக்கரவாகனத்தில் செல்பவர்களுக்கு தலைக் கவசம் மிகவும் முக்கியம் என்பது உங்களுக்கு தெரியும். ஆனால், சில நிறுவனங்கள் தரமற்ற மூலப்பொருட்களைக் கொண்டு, தரமில்லாத, வாகன ஓட்டிகளின் உயிரை பாதுகாக்கும் திறனில்லாத ஹெல்மெட்களை தயாரிக்கின்றனர்.

போலியாக ஐஎஸ்ஐ முத்திரையும் இட்டு விற்பனை செய்து வருகின்றனர். அவர்கள் மீது மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

ஒரு விளையாட்டுவீரராக இருக்கும் நான் விளையாடும் போதும், ஹெல்மெட் எந்த அளவுக்கு முக்கியம், தரமுள்ளதாக இருக்க வேண்டும் என்பதை உணர்ந்தவன். ஹெல்மெட் போன்ற உயிர்காக்கும் கருவிகள் அதிக உயர்தரமான பொருட்களால் தயாரிக்கப்பட வேண்டும். அப்போதுதான் களத்தில் துணிச்சலாக நாங்கள்விளையாட முடியும்.

இதே போலத்தான் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அணியும் ஹெல்மெட்டும் உயர்ந்த தரத்தில் இருப்பது அவசியம் என நம்புகிறேன். இருசக்கர வாகன ஓட்டிகளில் விபத்தில் சிக்கி உயிரிழப்புகளில் 70 ச தவீதம் பேர் தரமற்ற ஹெல்மெட்களை அணிந்ததால், உயிரிழந்தனர் என்பது தெரியவந்துள்ளது.

2016ம் ஆண்டு அதிகமான சாலை விபத்துக்கள் நடந்துள்ளன, அதில் 30 சதவீதம் இருசக்கர வாகன ஓட்டிகளால் நடந்த விபத்துக்கள் என்பது எச்சரிக்கைக் குரியதாகும். போலியான, தரமற்ற ஹெல்மெட்களை அணிவது இருசக்கர வாகன ஓட்டிகளின் உயிருக்கு மிகவும் ஆபத்தாகும். தரமான ஹெல்மட்களை அணியும்போது, சாலை ஓட்டிகள் விபத்தில் சிக்கினாலும் அவர்கள் உயிர்பிழைக்க 42சதவீதம் வாய்ப்பு இருக்கிறது.

சாலைப்போக்குவரத்து துறை அமைச்சகம் சாலைபாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரமாக செய்து வருகிறது என்பதை புரிந்துகொண்டேன். அதேசமயம், தரமற்ற ஹெல்மெட்களை தயாரித்து, போலியாக ஐஎஸ்ஐ முத்திரை பதித்து விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் எதிராக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். தரமற்ற முறையில் தயாரிக்கப்படும் ஹெல்மெட்கள் ஒருபோதும் விபத்தில் சிக்குபவர்களின் உயிரை பாதுகாக்காது.

மேலும், இருசக்கரவாகன ஓட்டிகள் அனைவரும் ஹெல்மெட்களை எளிதாக வாங்கும் வகையில், அதன் தரத்தை அதிகப்படுத்தி, குறைந்த விலையில் விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலை பாதுகாப்பை மேம்படுத்த நீங்கள் எடுக்கும் அனைத்து நடவடிக்கைக்கும் நான் ஒத்துழைப்பு தருகிறேன்

இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x