Published : 20 Mar 2018 11:48 AM
Last Updated : 20 Mar 2018 11:48 AM

‘‘எனது மகளின் போராட்டத்தை அவமதித்து விட்டீர்கள்’’ - ஆபாசமாக பேசிய முன்னாள் டிஜிபிக்கு நிர்பயாவின் தாய் கண்டன கடிதம்

தன்னை பற்றி ஆபாசமாகவும், பாலியல் பலாத்காரம் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையிலும் கருத்து தெரிவித்த முன்னாள் போலீஸ் டிஜிபி சாங்கிலியானாவுக்கு கண்டனம் தெரிவித்து நிர்பயாவின் தாய் ஆஷா தேவி கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த 2012-ம் ஆண்டு டெல்லியில் மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த மாணவி நிர்பயா (வயது 23). கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி இரவு தனது நண்பருடன் சாலையில் நடந்து சென்றபோது, 6 பேர் கொண்ட கும்பலால் கடத்தப்பட்டு ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

பாலியல் பலாத்காரத்தில் படுமோசமாகக் காயமடைந்த நிர்பயாவை சிங்கப்பூருக்கு மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் சென்றும், சிகிச்சை பலனளிக்காமல் டிசம்பர் 29-ம் தேதி உயிரிழந்தார். நிர்பயாவின் மரணம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையையும், பெண்களின் பாதுகாப்பு குறித்த கேள்வியையும் எழுப்பியது.

நிர்பயாவின் மரணத்துக்கு நீதி கேட்டு அவரின் தாய் ஆஷா தேவி பல நீதி போராட்டங்களை நடத்தினார். இறுதியில் 6 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 8-ம்தேதி உலக மகளிர் தினத்தையொட்டி பெங்களூரு நகரில் சிறப்புக் கூட்டம் நடத்தப்பட்டது. அந்தக் கூட்டத்தில் நிர்பயாவின் தாய் ஆஷா தேவியும் கர்நாடக மாநில முன்னாள் போலீஸ் டிஜிபி சாங்கிலியானாவும் கலந்து கொண்டனர்.

விழாவில் போலீஸ் டிஜிடி சாங்கிலியானா பேசுகையில், ''ஆஷா தேவி இந்த வயதிலும் என்ன உடல்கட்டுடன் இருக்கிறார் பாருங்கள். அப்படியென்றால், நிர்பயா எந்த அளவுக்கு அழகாக இருப்பார் என கற்பனை செய்துபாருங்கள். பலம் வாய்ந்த ஆண்கள் பலாத்காரம் செய்தால், அவர்களிடம் சண்டை போடாமல், சரணடைந்து விடுங்கள். அப்படி செய்தால், உயிர் பலி ஏற்படுவதை தவிர்க்கலாம்'' என பேசியதாக செய்தி வெளியானது.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சாங்லியானாவுக்கு பெண்கள் அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.

இந்நிலையில் சாங்லியானாவுக்கு கண்டனம் தெரிவித்து ஆஷா தேவி திறந்த மடல் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

‘‘பெங்களூரில் பெண்கள் நடத்திய நிகழ்ச்சியில் எனது ஆதரவை தெரிவிப்பதற்காகவே சென்றேன். நல்ல வேளை எனது மகளுக்கு நடந்த மோசமான பாதிப்பு எனக்கு நடக்கவில்லை.

அவர் பேசியபோது நான் மேடையில் அமர்ந்து இருந்தேன். அதனால் அவர் என்ன பேசினார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதனால் அங்கேயே அவருக்கு பதிலளிக்கவில்லை. அங்கிருந்து பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறிய பிறகு தான் அவரது வார்த்தைகளில் இருந்த கடுமையை புரிந்து கொண்டேன்.

நீங்கள் எனது மகளுக்காக நடந்த போராட்டத்தை அவமதித்து விட்டீர்கள். நமது சமூகத்தில் பொதுவில் இருக்கும் மிக மோசமான, தரக்குறைவான வர்ணனையை பொதுமை படுத்தி வீட்டீர்கள்’’ எனக்கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x