Last Updated : 03 Mar, 2018 11:32 AM

 

Published : 03 Mar 2018 11:32 AM
Last Updated : 03 Mar 2018 11:32 AM

சிரியா கொலைகளைக் கண்டித்து ஊர்வலம் நடத்த அனுமதி மறுப்பு: தற்கொலைக்கு முயன்ற தெலங்கானா இளைஞர்

சிரியா கொலைகளைக் கண்டித்து ஊர்வலம் நடத்தக் கோரியதற்கு அதிகாரிகள் அனுமதி வழங்க மறுக்கப்பட்டதை அடுத்து தெலங்கானா மாநிலத்தின் வாரங்கல் நகர முஸ்லிம் குழு தலைவர் முகம்மது நயீம் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

வெள்ளிக்கிழமை இரவு, முகம்மது நயீம் தனது பேஸ்புக்கிலிருந்து வீடியோவில் தோன்றி, சிரியாவில் உள்ள குழந்தைகள் உள்ளிட்ட அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து ஊர்வலம் நடத்த அனுமதி மறுக்கின்ற காவல்துறை மீதான மீதான தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.

அப்போது முகம்மது நயீம் தனது பாக்கெட்டிலிருந்து ஒரு பாட்டில் எடுத்து, தனது வாழ்க்கையை முடித்துக்கொள்வதாக கூறி அருந்தினார். பின்னர் அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவர் தனது நிலைப்பாட்டில் உறுதியோடு இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இவர் முஸ்லிம் ஹக்கலு பொரடா சமிதி முஸ்லிம் உரிமைகளுக்கான போராட்டக்குழு)வின் வாரங்கல் மாவட்ட தலைவராக உள்ளார்.

தங்கள் அமைப்பின் சார்பாக அமைதி ஊர்வலம் நடத்த அனுமதி கோரியதாகவும் காவல்துறை ஆரம்பத்தில் ஒப்புக் கொண்டு பின்னர் மறுத்துவிட்டதாகவும் அவர் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், ''சிரியாவில் நடந்துவரும் கொலைகளைத் தடுப்பதில் உதவியற்றவனாக நான் இருக்கிறேன். குறைந்தபட்சம் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒற்றுமையுடன்கூடி ஒரு கண்டன ஊர்வலத்தைக் கூட நடத்தவில்லை என்று வருத்தமாக உள்ளது.

அரசியல் தலைவர்கள் தங்கள் தங்கள் நலன்களைக் காத்துக்கொள்வதிலேயே குறியாக இருக்கின்றனர். சமுதாயத்திற்கு குரல் கொடுக்கவேண்டுமென்றோ பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக நிற்கவேண்டுமென்றோ அவர்கள் கவலைப்படுபவர்களாக அவர்கள் இல்லை'' என்று தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை காலையிலேயே, மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்துகொள்ளும் முயற்சியில் முகம்மது நயீம்  இறங்கினார். இருந்தாலும் அமைப்பின் உறுப்பினர்கள் தீவிர நடவடிக்கை எடுக்காமல் அவரைத் தடுத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x