Last Updated : 13 Feb, 2018 05:56 PM

 

Published : 13 Feb 2018 05:56 PM
Last Updated : 13 Feb 2018 05:56 PM

ஜம்முவில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டால் மட்டும் ஏன் அமைதியாக இருக்கிறீர்கள்?- ஒவைசி கேள்வி

ஜம்முவில் உள்ள ராணுவ முகாமில் தீவிரவாதிகள் தாக்குதலில் ராணுவ வீரர்கள் உள்ளிட்ட 5 காஷ்மீர் முஸ்லிம்கள் கொல்லப்பட்டபோது, ஏன் மவுனமாக இருக்கிறீர்கள்?, முஸ்லிம்களின் தேசப்பற்று பற்றி இப்போது பேசுங்கள் என்று இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவர் அசாசுதீன் ஒவைசி கேள்வி எழுப்பி உள்ளார்.

ஜம்முவில் உள்ள ராணுவ முகாமுக்குள் கடந்த 10-ம் தேதி புகுந்த தீவிரவாதிகள் அங்கிருந்த குடியிருப்புகள் மீது நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் உள்பட 5 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் 5 பேர் முஸ்லிம்கள் ஆவர்.

இது குறித்து ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

ஒவ்வொரு நாளும் இரவு 9 மணிக்கு தொலைக்காட்சிகளில் முஸ்லிம்களின் தேசப்பற்று குறித்து கேள்வி மேல் கேள்வி கேட்கப்படுகிறது. காஷ்மீர் மக்கள் மீது இந்த சந்தேகம் விதைக்கப்படுகிறது.

ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர். அதில் 5 பேர் முஸ்லிம்கள். ஆனால், முஸ்லிம்கள் கொல்லப்படும்போது மட்டும் அனைவரும் அமைதியாக இருக்கிறார்கள். ஏன் இந்த விஷயத்தில் மட்டும் அனைவரும் பேசாமல் மவுனம் காக்கிறார்கள்?.

முஸ்லிம்களின் நேர்மை, தேசப்பற்று, முஸ்லிம்களை பாகிஸ்தானியர்கள் என்று கூறியவர்கள் எல்லாம் இந்த சம்பவத்தில் இருந்து பாடம் கற்க வேண்டும்.

நாங்கள் எங்கள் உயிரை நாட்டுக்காக தியாகம் செய்துள்ளோம், தீவிரவாதிகள் ராணுவத்தினரையும் கொலை செய்துள்ளார்கள், முஸ்லிம்களையும் கொலை செய்துள்ளனர்.

அவர்கள் யாரையும் மதத்தின் அடிப்படையில் பாகுபாடு பார்க்கவில்லை. அவர்கள் அனைவரையும் இந்தியர்களாக பார்க்கிறார்கள். ஆனால், இன்னும் சிலர் முஸ்லிம்களின் தேசப்பற்றை பற்றி சந்தேகம் கொள்கிறார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x