Published : 13 Feb 2018 03:44 PM
Last Updated : 13 Feb 2018 03:44 PM

சர்வதேச வானொலி தினத்துக்கு மோடி வாழ்த்து: மன் கி பாத்தின் மொத்த தொகுப்பையும் பகிர்ந்தார்

சர்வதேச வானொலி தினத்தை ஒட்டி ட்விட்டரில் வாழ்த்து கூறியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

இன்று (பிப்ரவரி 13) சர்வதேச வானொலி தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை ஒட்டி பிரதமர் மோடி அவரது ட்விட்டர் பக்கத்தில் "வானொலி உலகு சார் அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். கற்றலுக்கும், புதிய தேடல்களுக்கும், பொழுதுபோக்கு அம்சங்களுக்கும் எப்போதும் வானொலி ஒரு மையப்புள்ளியாக செயல்படட்டும்.

வானொலி எப்போதும் மக்களை நெருக்கமாக இணைக்க வல்லது. அதை நான் 'மன் கி பாத்' நிகழ்ச்சி மூலம் உணர்ந்துளேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

வாழ்த்துச் செய்தியோடு மன் கி பாத் என்ற பெயரில் அவர் மக்களுக்காக உரையாற்றும் நிகழ்ச்சியின் மொத்த தொகுப்புக்கான இணைப்பையும் கொண்டுள்ள இணைய முகவரியையும் பகிர்ந்தார். https://www.narendramodi.in/mann-ki-baat என்ற தளத்தில் மோடியின் 'மன் கி பாத்'தின் மொத்த தொகுப்பையும் கேட்கலாம்.

மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று வானொலி மூலம் 'மன் கி பாத்' (மனதின் குரல்) நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x