Published : 13 Feb 2018 10:03 AM
Last Updated : 13 Feb 2018 10:03 AM

அதிக எடை செயற்கைகோள்களை விண்ணில் ஏவ இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிர முயற்சி

அதிக எடையுள்ள செயற்கைகோள்களை தயாரித்து விண் ணில் செலுத்துவதற்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையமான இஸ்ரோ தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வரு கிறது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), தற்போது 4 டன் எடையுள்ள செயற்கைகோள்களை உயர் புவிவட்டப் பாதையிலும், 8 டன் எடையுள்ள செயற்கைகோள்களை குறைந்த உயர புவிவட்டப் பாதையிலும் செலுத்தும் திறனைப் பெற்றுள்ளது. நம்மிடையே இருக்கும் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட ராக்கெட்டுகள் மூலம் இவ்வளவு எடையுள்ள செயற்கைகோள்களை மட்டுமே விண் ணில் செலுத்தமுடியும். அதிக எடையுள்ள செயற்கைகோள்களை இஸ்ரோ தயாரிக்கும்போது, அவை தென் அமெரிக்காவின் கொருவிலுள்ள ஏரியன் விண்வெளி தளத்திலிருந்து செலுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் அமெரிக்காவிலுள்ள ஸ்பெஸ் எக்ஸ் விண்வெளி நிறுவனமானது, அதிக எடையுள்ள செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி புகழ்பெற்று வருகிறது. வரும் 17-ம் தேதி குறைந்த செலவிலான இன்டர்நெட் வசதியைப் பெறுவதற்கான அதிக எடையுள்ள செயற்கைகோளை விண்ணில் செலுத்தவுள்ளது.

இதுகுறித்து இஸ்ரோ தலைவர் கே.சிவன் கூறியதாவது:

ஸ்பெஸ்எக்ஸ் நிறுவனமானது சிறப்பாக செயல்பட்டு அதிக எடை கொண்ட செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. இதற்கான அதிநவீன தொழில்நுட்பம், கருவிகள் ஸ்பெஸ்எக்ஸ் வசம் உள்ளன. ஸ்பெஸ் எக்ஸ் வசமுள்ள தொழில்நுட்பத்தின் மூலம் 60 டன் எடை கொண்ட செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த முடியும். அதிக எடை கொண்ட செயற்கைகோள்களை விண்ணில் செலுத்துவதற்கான முயற்சிகளை இஸ்ரோ தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

தற்போது ஸ்பேஸ்எக்ஸ் வசமுள்ள அதிக எடை கொண்ட செயற்கைகோள்களைத் தாங்கிச் செல்லும் ராக்கெட் டிசைன்கள் நம்மிடையேயும் உள்ளன.

அதை உருவாக்குவதற்கு நம்மிடம் தொழில்நுட்பங்கள் இல்லை. அந்த தொழில்நுட்பம் மிகவும் சிக்கலானது. முக்கியமாக செமி கிரையோஜெனிக் சிஸ்டம் நம்மிடம் இல்லை. இதற்கான ஆராய்ச்சியில் இஸ்ரோ தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தற்போது இந்த சோதனையின் ஆரம்பக் கட்டத்தில் இருக்கிறோம்.

தொடர்ந்து பல திட்டப் பணிகளைத் தொடங்கவுள்ளோம். இது எவ்வளவு காலத்தில் தயாராகும். அதிக எடையுள்ள செயற்கைகோளை சுமந்து செல்வதற்கான ராக்கெட் தொழில்நுட்பம் எதிர்காலத்துக்கு கண்டிப்பாகத் தேவை. இது எதிர்காலத்தில் மனிதனை விண்வெளிக்குச் சுமந்து செல்வதற்கு உதவும். அதே நேரத்தில் மீண்டும் பயன்படுத்தக்கூடிய பொருள் தொழில்நுட்பத்தை இஸ்ரோ உருவாக்கி வருகிறது.

இவ்வாறு இஸ்ரோ தலைவர் கே.சிவன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x