Published : 05 Feb 2018 06:15 PM
Last Updated : 05 Feb 2018 06:15 PM

தாஜ்மகால் விரைவில் தேஜ் கோயிலாகும்: வினய் கட்டியார் மீண்டும் சர்ச்சை பேச்சு

தாஜ்மகால் விரைவில் தேஜ் கோயிலாக மாறும் என பாஜக எம்பி வினய் கட்டியார் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலுக்கு, சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் தாஜ் மஹோத்தவ் விழாவை அம்மாநில அரசு வரும் 18ம் தேதி முதல் நடத்துகிறது. இதுகுறித்து அம்மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி வினய் கட்டியார் கூறியதாவது:

‘‘தாஜ்மகால் என்பது மொகலாய மன்னர் ஒளரங்கசீப் காலத்திற்கு முந்தையது. அப்போது தேஜ் கோயிலாக இருந்தது. அந்த கோயிலை ஒளரங்கசீப் மயானமாக மாற்றி விட்டார். இருப்பினும் மக்கள் மனதில் அது சிவனின் ஆலயமான தேஜ் கோயிலாகவே உள்ளது. எனவே இதற்கு விழா எடுப்பது தவறல்ல. எங்களை பொறுத்தவரை தாஜ்மகாலும், தேஜ் கோயிலும் ஒன்று தான். அது விரைவில் கோயிலாக மாறும்’’ எனக்கூறினார்.

பாஜக மற்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்த பலரும்,  தாஜ்மகால் இந்து கோயில் என  பலமுறை பேசி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x