Last Updated : 05 Feb, 2018 05:37 PM

 

Published : 05 Feb 2018 05:37 PM
Last Updated : 05 Feb 2018 05:37 PM

உயர்நீதிமன்ற நீதிபதிக்காக முதன்முதலாக ராஜஸ்தானில் பத்மாவத் சிறப்புத் திரையிடல்

பத்மாவத் வரலாற்றுத் திரைப்படத்தின் சிறப்புத் திரையிடலுக்காக ராஜஸ்தான் மாநிலத்திலேயே முதன்முதலில் ஜோத்பூர் நகரத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநில உயர்நீதி மன்ற நீதிபதி சந்தீப் மேத்தா மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் ஆகியோர் நால்வர் இத்திரையிடலை காண உள்ளனர்.

பத்மாவத் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி மற்றும் இப்படத்தில் நடித்த தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங் ஆகியோரின் மீது வழக்குத் தொடரப்பட்டதை அடுத்து அவர்களுக்கு எதிராக தீவானா காவல் நிலையத்தில் எப்ஐஆர் பதியப்பட்டது. அவ்வழக்கை விசாரரித்துவரும் மாநில உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற நீதிபதி இத்திரைப்படத்தை பார்ப்பது அவசியம் என இச்சிறப்புத் திரையிடலுக்கு உத்தரவிட்டது.

பத்மாத் திரைப்படம் வரலாற்றை சிதைத்துவிட்டது என்றும் ராணி பத்மினி பற்றிய மக்கள்வைத்திருக்கும் உயர்ந்த பிம்பத்தை காயப்படுத்திவிட்டது என்றும் வீரேந்திர சிங் மற்றும் நாக்பால் சிங் ஆகிய இருவர் செய்த புகாரின் அடிப்படையிலேயே இந்த எப்ஐஆர் போடப்பட்டது.

இவ் வழக்கை விசாரித்த நீதிபதி மேத்தா ''நீதியின் முடிவை பாதுகாப்பதற்கு இப்படத்தின் திரையிடல் இன்றியமையாதது என்பதில் நீதிமன்றம் உறுதியாக உள்ளது'' என்றார்.

மனுதாரர், நீதிமன்றத்திற்காக திரைப்படத்தை திரையிட தனது ஒப்புதலை அளித்ததைத் தொடர்ந்து நீதிபதி மேத்தா இன்று திரையிடலுக்கு ஏற்பாடு செய்யும்படி உத்தரவிட்டார்.

பலத்த பாதுகாப்புடன் இன்று மாலை 8.00 மணியளவில் ஐநாக்ஸ் மால் அரங்கில் இவ்வரலாற்றுத் திரைப்படம் திரையிடப்பட உள்ளது. ஒரே ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்யும்விதமாக திரைப்பட அரங்க உரிமையாளர்களுக்கு சிறப்பு கடவுச்சொல் வழங்கப்பட்டுள்ளது.

திரைப்பட அரங்கிலும் அரங்கைச் சுற்றிலும் சுமார் நூறு போலீஸ்காரர்கள் பாதுகாப்புக்காக களம்இறக்கப்பட்டுள்ளனர்.

இத் திரையிடல் குறித்து ஸ்ரீ ரஜ்புத் கர்ணி சேனா அமைப்பின் நிறுவனர் லோகேந்திர சிங் கால்வி, ஐஏஎன்எஸ்ஸிடம் தெரிவித்ததாவது:

''நிர்வாகம் தன்னை அழைத்ததாகவும் எங்கள் அமைப்பு இத்திரைப்படத்திற்கு உறுதுணையாக இருக்கவேண்டும் என்பதை உறுதி செய்யவேண்டும் எனவும் அரசு கேட்டுக்கொண்டது. சட்டபூர்வ காரணங்களுக்காக இந்தப் படத்தை திரையிடுவதற்கு எவ்வித சிக்கல்களும் இல்லை, எங்கள் பக்கத்திலிருந்து எந்தவொரு பிரச்சினையும் இருக்காது," என்று அவர் கூறினார்.

கடும் எதிர்ப்புகளுக்கிடையே வெளியான பாலிவுட் திரைப்படம் 'பத்மாவத்' மாபெரும் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x