Published : 05 Feb 2018 08:55 AM
Last Updated : 05 Feb 2018 08:55 AM

மத்திய அரசில் 2.53 லட்சம் பேர் கடந்த 2 ஆண்டுகளில் நியமனம்: மத்திய பொது பட்ஜெட்டில் தகவல்

கடந்த 1-ம் தேதி, நாடாளுமன்ற மக்களவையில் பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்தார். அதில் பணி நியமனம் குறித்த புள்ளிவிவரங்களை அவர் வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் நிலவரப்படி மத்திய அரசு துறைகளில் பணியாற்றுவோர் எண்ணிக்கை 32.52 லட்சமாக இருந்தது. அதைவிட வரும் மார்ச் 1-ம் தேதிக்குள் 2.53 லட்சம் பேர் கூடுதலாக நியமிக்கப்படுவார்கள். அதன்படி மத்திய அரசு துறைகளில் பணியாற்றி வரும் ஊழியர்களின் எண்ணிக்கை, வரும் மார்ச் 1-ம் தேதிக்குள் 35.05 லட்சமாக இருக்கும். பெரும்பாலும் போலீஸ் துறையில் அதிக நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து 2017-ம் ஆண்டுவரை 2 ஆண்டுகளில் 2.27 லட்சம் பேருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் 1 நிலவரப்படி மத்திய அரசில் 34.8 லட்சம் பேர் பணியாற்றுவது கணக்கிடப்பட்டுள்ளது.

மத்திய அரசில் போலீஸ் துறை மட்டுமன்றி, வேளாண் துறை, விவசாயிகள் நலத்துறை, கால்நடை துறை, பால் பண்ணை மற்றும் மீன்வளத்துறைகளில் அதிக எண்ணிக்கையில் பணி நியமனம் நடந்துள்ளது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x