Published : 01 Feb 2018 03:31 PM
Last Updated : 01 Feb 2018 03:31 PM

பட்ஜெட் 2018: அருண் ஜேட்லியின் ‘ஹிங்கிலிஷ் விங்கிலிஷ்’ - நெட்டிசன்களின் விமர்சனம்

 

மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்த நிதியமைச்சர் அருண் ஜேட்லி மரபை உடைக்கும் விதமாக ஹிந்தி-ஆங்கிலம் கலந்த உரையில் தாக்கல் செய்தார், அருண் ஜேட்லியின் இந்த ‘ஹிங்கிலிஷ் விங்கிலிஷ்’ சமூக வலைத்தள வாசிகளின் கேலிப்பார்வைக்கு உரியதானது.

பட்ஜெட் உரையில் முதன் முதலாக ஹிந்தி மொழியையும் சேர்த்து ஆங்கிலம் கலந்து பேசினார். பாஜகவின் முக்கிய தொகுதிகளான வடமாநில மக்களை ஈர்க்கும் விதமான ஒரு உத்தியாகும் இது. விவசாயிகளை மையப்படுத்தும் பட்ஜெட் என்பதால் அவர்களுக்கும் புரியும் விதமாக ஹிந்தி மொழியிலும் உரையாற்றியதாகக் கூறப்படுகிறது.

ஆனால் சமூகவலைத்தள வாசிகளோ எவ்வளவு விவசாயிகளுக்கு ஹிந்தி மொழி கூட புரியும் என்று கேட்டுள்ளனர்.

நெட்டிசன்களின் விமர்சனங்கள் இதோ:

தங்கதுரை: சில வேளைகளில் ஹிந்தியன்களுக்கு இந்தியாவை பலதரப்பட்ட மொழியியல் கலாச்சாரக் குழுக்களுடன் ஒரே பொருளாக பார்ப்பதுதான் வேலையோ என்று தோன்றுகிறது. கற்பனையான ஒரு பிரிவினை வெளிப்படையாக்கப்படுகிறது இதன் மூலம் மற்ற மக்கள் தொகுதியினர் அன்னியமாக்கப்படுகின்றனர்.

மேலும் பலர் பட்ஜெட்டுக்கு பெரிதும் பங்களிப்பு செய்யும் 5 மாநிலங்கள் ஹிந்தி பேசாத மாநிலங்களே என்று சுட்டிக்காட்டினர்.

கார்கா சாட்டர்ஜி: பட்ஜெட்டுக்குப் பங்களிப்பு செய்யும் 5 மாநிலங்கள் ஹிந்தி மாநிலங்கள் அல்ல. முதல்முறையாக பட்ஜெட் உரை ஹிந்தியில். பசுக்கள் பகுதியல்லாத பிற மொழிகளிலும் அதிகாரபூர்வமாக அச்சிடப்படவில்லை. யாரிடம் சுரண்டுகிறோமோ, கொள்ளையடிக்கிறோமோ, திருடுகிறோமோ அவர்களுக்கு தாங்கள்தான் கொள்ளையடிக்கப் படுகிறோம் என்பது புரியக்கூடாது என்பது தெளிவாகத் தெரிகிறது. கொள்ளையடிப்பவர்கள் தங்களுக்கு எவ்வளவு கிடைத்தது என்பதை அறிய வேண்டும். அதுதான் இந்த பட்ஜெட் உரையின் நோக்கம்.

ஷ்ருதா யஜமான்: முதலில் ஹிந்தி. மற்றவர்கள் அரசுக்கு அன்பளிப்பு செலுத்த வேண்டியதுதான்.

நாகார்ஜுன் துவாரகாநாத்: பட்ஜெட் உரையை ஏன் ஹிந்தியில் படிக்க வேண்டும்? ஹிந்தி தெரியாதவர்கள் என்ன செய்வார்கள்? மற்ற மாநிலங்களை விட தென் இந்திய மாநிலங்கள் நாட்டின் வருவாயில் பெரும் பங்களிப்பு செய்கின்றன. இவர்களுக்கு இன்னும் ஏதாவது செய்ய வேண்டாமா? ஹிந்தித் திணிப்பை நிறுத்துங்கள்!

நிகில் வாக்லே: அவருக்கு ஹிந்தியும் சரியாக வரவில்லை, அவர் ஹிந்தியில் சவுகரியமாக உணரவில்லை. மொழி ரீதியாக இந்தப் பட்ஜெட் ஒரு சந்தர்பவாத பட்ஜெட்டே.

சுமந்த் ராமன்: ஜேட்லி சில வார்த்தைகளில் (ஹிந்தி) திணறுவது வெளிப்படையாகத் தெரிந்தது.

ரகுவீர் ஸ்ரீநிவாசன்: இந்த ஹிந்தி-இங்கிலிஷ், இங்கிலிஷ்-ஹிந்தி ஹிங்கிலிஷ் எரிச்சலை ஏற்படுத்துகிறது, புரிந்து கொள்ளுங்கள் ஜேட்லி.

மிஹிர் ஷர்மா: ஹிந்தியில் கூறியதற்கும் ஆங்கிலத்தில் கூறியதற்கும் நடை ரீதியாகவும் உள்ளடக்க ரீதியாகவும் வித்தியாசம் தெரிந்தது. ஹிந்தியில் பேசும்போது, பெண்கள் எல்பிஜி இணைப்புகள், விவசாயிகள், சுத்தம் சுகாதாரம், இந்தியில் ஏற்கெனவே கூறியதை திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டிருந்தார்.

பிரகர்ஷ் அய்ரன்: டெல்லியில் பட்ஜெட் படித்ததால் ஒருவேளை ஒற்றை இலக்க இரட்டை இலக்க திட்டத்தைக் கடைபிடித்தாரோ ஜேட்லி. ஹிந்தி-இங்கிலிஷ் பக்கங்களை மாறி மாறி புரட்டியது இப்படித்தான் தோன்றியது (அரவிந்த் கேஜ்ரிவால் காற்றில் மாசை குறைக்க கார்களில் ஒற்றை இலக்க, இரட்டை இலக்க திட்டத்தைக் கொண்டுவந்ததைக் குறிப்பிட்டுள்ளார்)

வெற்றிச் செல்வன் எனபவர் இன்று போய் நாளை வா என்ற பாக்யராஜின் படத்தில் வரும் ‘ஏக் காவ் மேன் ஏக் கிசான் ரகு தாத்தா|’ என்றும் இன்னொரு மீமில் 16 வயதினிலே படத்தில் டாக்டர் கேரக்டர் பேசும்போது ரஜினி, சார் என்ன சொல்றார்னு கேட்பார் அதற்கு கவுண்டமணி பதில் சொல்வார் அதே போன்று படத்தை வெளியிட்டு, ‘இந்த மாசம் பிப்ரவரி 30-க்குள்ள எல்லாருடைய கணக்குலயும் ரூ.15 லட்சம் போடப்போறோம்னு சொல்றாரு’ என்று ஹிங்கிலிஷ் பட்ஜெட் உரையை கேலி செய்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x