Published : 01 Feb 2018 08:43 AM
Last Updated : 01 Feb 2018 08:43 AM

உலக ஜனநாயக நாடுகள் பட்டியலில் 42-வது இடத்தில் இந்தியா: ‘எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யுனிட்’ தகவல்

உலக ஜனநாயக நாடுகள் பட்டியலில், இந்த ஆண்டு இந்தியா 42-வது இடத்துக்கு சரிந்துள் ளது.

இங்கிலாந்தின் தலைநகர் லண்டனை மையமாகக் கொண்டு ‘எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ யுனிட்’ (இஐயு) என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இது, ‘தி எகனாமிஸ்ட் குரூப்’பை சேர்ந்தது. கடந்த 1946-ம் ஆண்டு தொடங்கப்பட்டு உலகளவில் ஆராய்ச்சி செய்து, பல்வேறு தகவல்களை வெளியிட்டு வருகிறது. இந்நிறுவனம் வெளியிட்டுள்ள ஆண்டு உலக ஜனநாயக அட்டவணையில் இந்தியா 42-வது இடத்துக்கு சரிந்துள்ளது. கடந்த ஆண்டு இந்தியா 32-வது இடத்தில் இருந்தது.

இந்தியாவில் பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் நடக்கும் வன்முறைகள், சிறுபான்மையினர் மீது நடக்கும் தாக்குதல் கள் போன்ற காரணங்களால் 42-வது இடத்துக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளதாக இஐயு கூறியுள்ளது.

அதன்படி, நார்வே தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. மொத் தம் அதற்கடுத்த நிலையில் ஐஸ்லாந்து, சுவீடன், நியூசிலாந்து, டென்மார்க், அயர்லாந்து, கனடா, ஆஸ்திரேலியா, பின்லாந்து, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன. அமெரிக்கா 21-வது இடத்தில் உள்ளது. ஜப்பான், இத்தாலி, பிரான்ஸ், இஸ்ரேல், சிங்கப்பூர், ஹாங்காங் ஆகியவை குறையுள்ள ஜனநாயக நாடுகள் பட்டியலில் உள்ளன. மொத்தம் 165 நாடுகளில் 19 நாடுகள் மட்டுமே முழு ஜனநாயகம் உள்ள நாடுகளாக பட்டியலில் கூறப்பட்டுள்ளது. வடகொரியா 167-வது இடத்திலும், சிரியா 166-வது இடத்திலும் உள்ளன. பாகிஸ்தான் (110-வது இடம்), வங்கதேசம் (92-வது இடம்), நேபாளம் (94-வது இடம்), பூடான் (99-வது இடம்) ஆகிய நாடுகள் உள்ளன. எதேச்சதிகார நாடுகளில் சீனா (139), மியான்மர் (120), ரஷ்யா (135), வியட்நாம் (140) ஆகியவை இடம்பெற்றுள்ளன. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x