Published : 13 Oct 2017 09:34 AM
Last Updated : 13 Oct 2017 09:34 AM

குஜராத்தில் பெண்கள் கழிவறையில் தவறுதலாக நுழைந்த ராகுல் காந்தி: சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவும் வீடியோ

விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி 3 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது, சோட்டா உதய்பூரில் பிரச்சாரத்துக்காக சென்ற ராகுல் அங்குள்ள கழிவறைக்குச் சென்றார்.

அப்போது ‘பெண்கள் கழிவறை’ என குஜராத்தி மொழியில் எழுதப்பட்டிருந்ததை கவனிக்காமல் அந்தப் பக்கம் ராகுல் சென்றுள்ளார். இதைப் பார்த்த உள்ளூர்வாசிகள் அவரிடம் தகவலை தெரிவித்தனர். உடனடியாக ராகுல், வேகமாக அங்கிருந்து வெளியேறினார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத் தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ராகுலுக்கோ அவரது பாதுகாவலர்களுக்கோ குஜராத்தி மொழி தெரியாததே இதற்குக் காரணம் என கூறப்படுகிறது. ஆனால் இது பாஜகவின் சதி என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி உள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணீஷ் தோஷி கூறும்போது, “பெண்கள் கழிவறை பக்கம் ராகுல் செல்வது போன்ற புகைப்படம்தான் வெளியாகி உள்ளது. அவர் அதனுள் நுழையவில்லை. ராகுலுக்கு ஆதரவு பெருகி வருகிறது. எனவே அவரது புகழைக் கெடுக்க வேண்டும் என்பதற்காக இந்த வீடியோவை பாஜகவினர் வேண்டுமென்றே பரவ விட்டுள்ளனர்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x