Published : 16 Sep 2016 08:47 AM
Last Updated : 16 Sep 2016 08:47 AM

ஹைதராபாத்தில் விநாயகர் சிலை ஊர்வலம்: ரூ.14.65 லட்சத்துக்கு லட்டு ஏலம்

ஹைதராபாத்தில் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆயிரக் கணக்கான விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப் பட்டு ஏரி, குளங்களில் கரைக்கப் பட்டன. விநாயகர் சிலைகளில் வைக்கப்பட்ட லட்டு பிரசாதங்கள் பல லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டன.

விநாயகர் சதுர்த்திக்கு வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகள் 11-வது நாளான நேற்று ஹைதராபாத் நகரில் ஊர்வல மாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. இதில் அசம்பாவிதங்கள் ஏற் படாமல் தடுக்க, 28,000 போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடு படுத்தப்பட்டனர்.

மேலும் 13 கம்பெனி ராணுவப் படையினரும் பாதுகாப்புப் பணி யில் ஈடுபட்டனர். 2,000 தன்னார்வ தொண்டு நிறுவனத்தார் துணை யுடன் பல்லாயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நகரின் மையப்பகுதியில் உள்ள உசைன் சாகர் ஏரி மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள 21 ஏரி, குளங்களில் கரைக்கப்பட்டன.

லட்டு பிரசாதம் ஏலம்

விநாயகர் சதுர்த்தியை யொட்டி ஹைதராபாத்தில் பல லட்டு பிரசாதங்கள் வைக்கப் பட்டு, சிறப்பு பூஜை செய்யப் பட்டன. பின்னர் இவை நேற்று பக்தர்கள் முன்னிலையில் ஏலம் விடப்பட்டன.

இதில் பாலப்பூர் விநாயகர் சிலையில் வைக்கப்பட்ட லட்டு பிரசாதம் ரூ. 14.65 லட்சத்துக்கு ஸ்கைலாப் ரெட்டி எனும் பக்தர் ஏலத்தில் எடுத்து அதனை பக்தர்களுக்கு இலவசமாக விநியோகம் செய்தார்.

இதேபோன்று ஜூப்ளி ஹில்ஸ் மதுரா நகர் விநாயகர் லட்டு பிரசாதம் ரூ. 9,99,999க்கு ஏலம் போனது. படங்பேட்டாவில் விநாயகர் சிலையில் வைக்கப்பட்ட லட்டு பிரசாதம் ரூ. 5.41 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x