Last Updated : 08 Nov, 2016 09:37 AM

 

Published : 08 Nov 2016 09:37 AM
Last Updated : 08 Nov 2016 09:37 AM

ஸ்மார்ட் நகரங்கள், டிஜிட்டல் இந்தியா போன்ற திட்டங்களுக்கு பிரிட்டன் விரிவான ஒத்துழைப்பு தரவேண்டும்: பிரதமர் தெரசா மேவிடம் நரேந்திர மோடி வேண்டுகோள்

பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் மிகப் பெரிய நாடாக இந்தியா உருவாகியுள்ளது என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள பிரிட்டன் பிரதமர் தெரசா மே தனது 2 நாள் அரசுமுறை சுற்றுப்பயணத்தின் முதல் நிகழ்ச்சியாக டெல்லியில் நேற்று நடந்த இந்திய, பிரிட்டன் தொழில்நுட்ப மாநாட்டில் பங்கேற் றார். அப்போது பிரதமர் நரேந்திர மோடி தமது அரசு சார்பில் மேற் கொள்ளப்பட்டு வரும் ஸ்மார்ட் நகரங்கள், டிஜிட்டல் இந்தியா போன்ற திட்டங்களை விவரித்து, இத்துறைகளில் பிரிட்டன் விரிவான ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும் என கேட்டுக் கொண் டார். தவிர பாதுகாப்பு, உற்பத்தி மற்றும் விண்வெளித் துறைகளிலும் முதலீடுகள் செய்ய பிரிட்டன் முன் வரவேண்டும் என்றும் பரஸ்பரம் தொழில்நுட்ப வீரத்தைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் இரு நாட்டுக் கும் இடையே புதிய வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் அவர் பேசியதாவது:

இரு நாடுகளும் பொருளா தாரத்தில் எண்ணற்ற சவால்களைச் சந்தித்து வருகின்றன. இந்த சவால் கள் இரு நாட்டின் வர்த்தகம் மற்றும் வணிகத்தை நேரடியாக பாதிக் கின்றன. இதனை முறியடிக்க இரு நாட்டின் தொழில்நுட்ப பலத்தை ஒருங்கிணைக்க வேண்டும். அதன் மூலம் புதிய வாய்ப்புகளை உரு வாக்க முடியும்.

திறந்தவெளி முதலீட்டு சூழ லுடன் கூடிய பொருளாதாரத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் நாடாக இந்தியா உருவாகி வரு கிறது. கடந்த 5 ஆண்டுகளாக இந்திய, பிரிட்டன் வர்த்தக உறவு சீராக சென்று கொண்டிருக்கிறது.

நேரடிய அந்நிய முதலீட்டுக் கொள்கைகளில் இருந்த கெடுபிடிகள் தளர்த்தப்பட்ட தால், பாதுகாப்பு, உற்பத்தி, விண் வெளி மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் துறைகளில் பிரிட்டன் அதிக பலன் அடையும் என்றும் எதிர்பார்க் கிறோம். பிரிட்டனில் அதிகமாக முதலீடு செய்த நாடுகளில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. அதே போல் பிரிட்டனும் இந்தியாவில் முதலீடு செய்துள்ளது. இதன் மூலம் பரஸ்பரம் இரு நாடுகளிலும் வேலைவாய்ப்புகள் அதிகமாக உருவாகி வருகின்றன.

இவ்வாறு அவர் பேசினார்.

பிரிட்டன் பிரதமர் தெரசா மே பேசும்போது, ‘‘இந்தியாவின் வர்த்தகம் சீராக நடைபெற தேவை யான உதவிகளை பிரிட்டன் வழங்கி வருகிறது. அதே சமயம் இந்த உறவு அடுத்தக் கட்டத்துக்கு முன்னேற வேண்டும் என விரும்புகிறேன். இந்தியா, பிரிட்டன் இடையே சிறப்பான ஒத்துழைப்பு நிலவி வருகிறது. இதன் காரண மாகவே ஐரோப்பாவுக்கு வெளியே சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதல்நாடாக இந்தியாவைத் தேர்ந் தெடுத்தேன்’’ என்றார்.

ரூ.83 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம்

பிரதமர் மோடி- பிரிட்டன் பிரதமர் தெரசா இடையே டெல்லி ஹைதராபாத் இல்லத்தில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடந்தது.

பேச்சுவார்த்தையின் போது இந்தியா, பிரிட்டன் இடையே ரூ.83 ஆயிரம் கோடி மதிப்பிலான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இரு நாட்டு மக்களுக்காக வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், திறன் வளர்ப்பு, உட்கட்டமைப்பில் முதலீடு மற்றும் எதிர்காலத்துக்கான தொழில்நுட்பங்களுக்கு ஆதரவு ஆகியவை மேம்படுத்தப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இதைத் தொடர்ந்து இருவரும் கூட்டாக நிருபர்களைச் சந்தித்தனர். அப்போது மும்பை, பதான்கோட் மற்றும் உரி தாக்குதல் சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்த பிரிட்டன் பிரதமர் தெரசா மே, தீவிரவாதத்தை ஆதரிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, ‘‘எல்லை தாண்டிய தீவிரவாதம் குறித்து பிரிட்டன் பிரதமருடன் ஆலோசித்தேன். இந்த விவகாரத்தில் சர்வதேச நாடுகள் தலையிட்டு தீவிரவாதத்தை ஒழிக்கவும், தீவிரவாதத்துக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினேன்’’ என்றார்.

பின்னர் இருவரும் வெளியிட்ட கூட்டறிக்கையில், ‘மனித சமூகத்துக்கு தீவிரவாதம் மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. தீவிரவாதம் எந்த வடிவில் எழுந்தாலும் அதை ஒடுக்க இந்தியாவும், பிரிட்டனும் உறுதி பூண்டுள்ளது. தீவிரவாதத்தை எந்த வகையிலும் சகித்துக் கொள்ள முடியாது. தீவிரவாதத்தில் நல்ல தீவிரவாதம், தீய தீவிரவாதம் என்ற பேதங்கள் இல்லை. தீவிரவாதம் இல்லாத தெற்கு ஆசியா உருவாக வேண்டும். இந்த இலக்கை எட்ட சர்வதேச நாடுகளும் முன் வரவேண்டும்’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x