Last Updated : 31 May, 2016 09:44 AM

 

Published : 31 May 2016 09:44 AM
Last Updated : 31 May 2016 09:44 AM

வருமானத்துக்கு அதிகமாக சொத்து ‘ரா’ முன்னாள் தலைவர் மீதான புகார் குறித்து சிபிஐ விசாரணை

நாட்டின் முன்னணி உளவு அமைப் பான ஆராய்ச்சி மற்றும் பகுப் பாய்வு பிரிவின் (ரா) முன்னாள் தலைவர் ஏ.கே.வர்மா வருமானத் துக்கு பொருந்தாத வகையில் சொத்து சேர்த்ததாகக் கூறப்படும் புகார் குறித்து சிபிஐ விசாரிக்க சிறப்பு சிபிஐ நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

இதுதொடர்பாக, சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பிரிஜேஷ் குமார் கர்க் தனது உத்தரவில், “காவல் துறை கண்காணிப்பாளர் பதவிக்கு குறையாத நிலையில் உள்ள அதி காரியைக் கொண்டு வர்மாவின் வருமானம் மற்றும் சொத்துகள் குறித்து விசாரித்து 3 மாதங்களுக் குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

கடந்த 1987 முதல் 1990 வரை ராஅமைப்பின் தலைவராக இருந்தவர் ஏ.கே.வர்மா. அப்போது இலங்கையில் இந்திய அரசின் அமைதிப்படை முகாமிட்டிருந்தது. அங்கு உளவுப்பணி மேற்கொள் வதற்காக ஏராளமான தொகை ஒதுக் கப்பட்ட து. இதில் பெருமளவு தொகையை ஏ.கே.வர்மா முறை கேடு செய்த தாக ரா முன்னாள் ஊழி யர் ஆர். கே.யாதவ் புகார் செய்தார்.

இதையடுத்து, வர்மா மீதான புகார் குறித்து விசாரிக்க கடந்த 2013-ம் ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதி டிஸ் ஹசாரி சிறப்பு நீதிமன்றம் ஓர் உத்தரவை பிறப்பித்தது. இதை எதிர்த்து சிபிஐ சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய் யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x