Last Updated : 29 May, 2015 06:23 PM

 

Published : 29 May 2015 06:23 PM
Last Updated : 29 May 2015 06:23 PM

ரூ.20,000 கோடி ஒதுக்கியும் கங்கை நதியை சுத்தம் செய்வதில் சிக்கல்

ஓராண்டுக்கு முன்னால் தங்களது வெற்றியைக் கொண்டாட கங்கை நதிக்கு வந்து பிரதமர் நரேந்திர மோடி ‘கங்கா ஆர்த்தி’ செய்த பிறகும் கூட கங்கை நதியை சுத்தம் செய்வதில் ஏதேனும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா என்பதில் பிரதமர் தொகுதியான வாரணாசி மக்களிடையே இருவேறு கருத்துக்கள் உள்ளன.

1986ம் ஆண்டு கங்கை நடவடிக்கைத் திட்டத்தை காங்கிரஸ் அரசு பிரகடனம் செய்த காலத்திலிருந்தே கங்கையை சுத்தம் செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் பிறகு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் இதில் இட்டும் கங்கை நதி சுத்தம் செய்யும் விவகாரத்தில் வெற்றி அடைய முடியாத நிலையே உள்ளது.

இந்த ஆண்டு, மத்திய அரசு, கங்கை நதியை சுத்தம் செய்யும் ‘நமாமி கங்கா’திட்டத்துக்கு ரூ.20,000 கோடி ஒதுக்கியது.

கங்கையை சுத்தம் செய்யும் நடவடிக்கைக்கான தேசிய குழுவின் இயக்குநர் புஷ்கல் உபாத்யாய், தி இந்து-விடம் (ஆங்கிலம்) கூறும் போது, “தற்போது நதிக்குள் வரும் கழிவு நீரின் அளவைக் குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது, மேலும், மாசுக் கண்காணிப்பு மற்றும் பொதுவிழிப்புணர்வு பங்கேற்றல் ஆகியவற்றுக்கு மேலும் முதலீடு செய்யப்படவுள்ளது. கங்கைக்குள் வரும் கழிவுநீரை சுத்தம் செய்யும் நிலுவையில் சுத்திகரிப்பு நிலையங்களை பூர்த்தி செய்யவும், புதிய சுத்திரகரிப்பு நிலையம் அமைக்க வேண்டிய தேவையும் உள்ளது. இதற்கு அந்த ரூ.20,000 கோடி பயன்படுத்தப்படவுள்ளது. மத்திய சர்வரிலிருந்து நதியின் மாசுக்கட்டுப்பாட்டை கண்காணிக்கும் திட்டமும் உள்ளது.

முன்னாள் ராணுவ வீரர்களைக் கொண்ட கங்கா நடவடிக்கைப் படை ஒன்றை உருவாக்க பாதுகாப்பு அமைச்சகம் கொள்கை அளவில் அனுமதி அளித்துள்ளது” என்றார்.

கங்கை நதியை காப்பாற்றுங்கள் இயக்கத்தைச் சேர்ந்த ரமா ரவுதா கூறும் போது, "கங்கை நதியைச் சுத்தம் செய்வதில் பிரதமர் மோடியின் திட்டம் வெற்றியடைந்து விட்டால் அவர் வாக்காளர்களால் வழிபடத்தகுதி பெற்று விடுவார்" என்றார்.

வாரணாசியில் உள்ள இந்து சமய நம்பிக்கையாளர்களும் பாஜக-வின் தீவிர ஆதரவாளர்களும் கங்கை நதித் தூய்மை திட்டம் குறித்து உற்சாகம் அடைய, 30 ஆண்டுகளாக படகு ஓட்டி வரும் தினேஷ் என்பவரோ, “கங்கையின் நிலையில் ஒன்றும் மாற்றம் ஏற்படவில்லை” என்று எதிர்மறை கருத்து தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x