Last Updated : 28 Jun, 2016 09:20 AM

 

Published : 28 Jun 2016 09:20 AM
Last Updated : 28 Jun 2016 09:20 AM

ரத்த வங்கிகளுக்கு தேசிய அளவில் இணையதளம்: மத்திய சுகாதார அமைச்சகம் விரைவில் அமைக்கிறது

ரத்த வங்கிகளுக்காக தேசிய அளவில் ஓர் இணையதளம் விரைவில் அமைக்கப்பட்ட உள்ளது. இதை, நாடு முழுவதிலும் உள்ள மக்கள் பயன்பெறும் பொருட்டு மத்திய சுகாதார அமைச்சகம் அமைக்கிறது.

விபத்துக்களால் பாதிக்கப்படும் மக்களுக்கு தேவைப்படும் ரத்தம் உரிய நேரத்தில் எளிதில் கிடைப் பதில் சிக்கல் நீடிக்கிறது. இப்பெரும் குறையை களைய மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வந்தது.

தேசிய அளவில் ரத்த வங்கிகளுக்காக ஓர் இணையதளம் அமைப்பது இதன் தீர்வாக இருக்கும் எனக் கருதப்பட்டது. இதற்கான முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளதாக கடந்த ஏப்ரலில் மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டா அறிவித்திருந்தார்.

இதற்காக நாட்டின் அனைத்து மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளை இணைக்க முடிவு செய்யப்பட்டு, கடிதம் எழுதப்பட்டிருந்தது. இதை ஏற்றுக்கொண்ட மாநிலங்கள் தங்கள் மருத்துவமனை பட்டியலை அனுப்பத் தொடங்கியுள்ளன.

இதில் முதல் மாநிலமாக ம.பி., தனது 6 மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிகளின் பட்டியலை அனுப்பியுள்ளது. அடுத்து மேற்கு வங்கத்தில் ஏற் கெனவே அம்மாநில அரசு சார்பில் செயல்பட்டு வரும் 108 ரத்தவங்கி களில் 58-ஐ தேசிய அளவி லான இணையதளத்தில் இணைப் பதற்காக அனுப்பியுள்ளது.

உ.பி.யும் மாவட்ட மருத்துவ மனை உட்பட நான்கு மருத்துவக் கல்லூரிகளின் பட்டியலை அனுப்பியிருப்பதுடன் அடுத்த மாதம் முதல் இணையதளத்தில் இணையத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளது.

ரத்த வங்கிகளுக்கான இந்த தேசிய இணையதளத்தில் ரத்தம் தேவைப்படுவோர் அல்லது அவர்களது உறவினர்கள் தங்கள் பெயர் மற்றும் இமெயில் முக வரியை பதிவு செய்ய வேண்டும். இதன் பிறகு அவர்கள் இணைய தளத்தில் தேடத் தொடங்கலாம். இவர்களுக்கு தேவைப்படும் பிரிவுகளுக்கான ரத்தம் எங்கு கிடைக்கும் என்ற தகவல் உட னடியாக அளிக்கப்படும். இதில், ரத்ததானம் அளிப்பவர்களின் பெயர், விலாசம் மற்றும் கைப்பேசி எண்களும் பட்டியலிடப்பட உள்ளது. இதில் ஏற்கெனவே தானம் அளிக்கப்பட்டு சேமித்து வைக்கப்படும் ரத்தம் வீணாகாமல் இருக்கும் பொருட்டு அவற்றுக்கு ‘பார் கோடிங்’ எண் உருவாக்கி குறிக்கப்படும். இதன்மூலம் முதலில் கிடைத்த ரத்தத்தை முதலில் பயன்படுத்தி வீணாகாமல் தடுக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசின் புள்ளிவிவரப் படி, நாடு முழுவதிலும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 234 மில்லியன் எண்ணிக்கையிலான பெரிய அறுவை சிகிச்சைகள் நடைபெற்று வருகின்றன. இதில் 10 மில்லியன் அறுவை சிகிச்சைகள் மகப்பேறு சம்பந்தப்பட்டவை ஆகும். இவற்றில் ரத்தசேதம் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 45,000 பெண்கள் உயிரிழக்கின்றனர். இந்தியாவின் ரத்த சேதங்களுக்காக ஆண்டுதோறும் தோராயமாக 3.5 மில்லியன் யூனிட் ரத்தம் தேவைப்படுவதாகவும் இந்த புள்ளிவிவரம் கூறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x