Last Updated : 09 Jan, 2015 10:05 AM

 

Published : 09 Jan 2015 10:05 AM
Last Updated : 09 Jan 2015 10:05 AM

மாஞ்சி நீக்கப்படுவாரா? - நிதிஷ் குமார் பதில்

பிஹார் மாநில முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சி அந்தப் பதவியில் இருந்து நீக்கப்படுவாரா என்று கேள்வி எழுப்பியதற்கு, 'அதுகுறித்து நான் முடிவு செய்ய முடியாது' என்று ஐக்கிய ஜனதாதள மூத்த தலைவர் நிதிஷ் குமார் கூறியுள்ளார்.

மேலும், ஜிதன் ராம் மாஞ்சியை நீக்குவது குறித்து ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் மற்றும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் ஆகியோருடன் விவாதிப்பதற்காகத்தான் தான் டெல்லி செல்வதாக வெளியாகும் தகவல்களையும் அவர் மறுத்துள்ளார்.

"பிஹார் விஷயம் குறித்து டெல்லியில் விவாதிப்பதற்கு அவசியம் எதுவுமில்லை" என்றார்.

அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கில் பாட்னா உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்த பிறகு அந்த எம்.எல்.ஏ.க்கள் குறித்து மாஞ்சி விமர்சனம் செய்தார். இதுகுறித்து கேள்வி எழுப்பியதற்கு, "கட்சியில் இருக்கும்போது வெவ்வேறு விதமாகப் பேசக் கூடாது. ஆனால் இவற்றால் கட்சிக்கு எந்தக் கெடுதலும் வந்துவிடாது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x