Last Updated : 03 Jul, 2017 10:02 AM

 

Published : 03 Jul 2017 10:02 AM
Last Updated : 03 Jul 2017 10:02 AM

மல்லையா உட்பட 10 வங்கி மோசடி வழக்குகள்: சிபிஐ விசாரணையை கண்காணிக்கிறது மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம்

தொழிலதிபர் விஜய் மல்லையாவின் வங்கி மோசடி வழக்கு உட்பட 10 மிகப்பெரிய மோசடிகள் குறித்த சிபிஐ விசாரணையை, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (சிவிசி) நேரடியாக கண்காணித்து வருகிறது என்று அதன் ஆணையர் டி.எம்.பசின் கூறினார்.

தொழிலதிபர் விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் சுமார் 9,000 கோடி ரூபாய் கடன் வாங்கி திரும்ப செலுத்தவில்லை. அவர் மீது பல்வேறு மோசடி வழக்குகள் உள்ளன. அவர் தற்போது லண்டனில் தஞ்சம் உள்ளார். இது போல் வங்கிகளில் நடந்த மிகப் பெரிய 10 மோசடிகள் குறித்த வழக்கு களை சிபிஐ விசாரித்து வருகிறது.

அந்த விசாரணைகளை சிவிசி தொடர்ந்து மேற்பார்வையிட்டு கண்காணித்து வருகிறது. இது குறித்து சிவிசி ஆணையர் பசின் நேற்று கூறியதாவது:

தங்களுடைய முடிவுகளில் உண்மையாக இருந்தால் வங்கிகள் பயப்படத் தேவையில்லை. ஊழல் கண்காணிப்பு ஆணையம், சிபிஐ, மத்திய கணக்கு தணிக்கை ஆகியவற்றை பார்த்து வங்கிகள் பயப்படத் தேவையில்லை.

வங்கிகள் தனிப்பட்ட முறை யிலோ அல்லது கூட்டாகவோ தாங்கள் வழங்கிய கடனை வசூ லிக்க துணிச்சலுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தவிர வங்கி ஊழியர்களின் நம்பகத்தன்மை குறித்தும் சிவிசி ஆய்வு செய்து வருகிறது. 10 மிகப்பெரிய வங்கி மோசடிகள் தொடர்பான சிபிஐ விசாரணையை யும் சிவிசி தொடர்ந்து கண் காணிக்கிறது. வாராக் கடனை வசூ லிக்க சட்டப்பூர்வமாக என்னென்ன செய்ய முடியுமோ அவற்றை தைரியமாக வங்கிகள் செய்யலாம்.

வங்கிகள் வாராக்கடன் குறித்த கணக்கு விவரங்களை த்தலைமை அலுவலகத்துக்குத் தெரி விக்கின்றனர். அதன்பிறகு கடன் வாங்கித் திரும்ப செலுத்தாதவர்கள் குறித்து போலீஸ், சிபிஐ, அம லாக்கத் துறை உட்பட விசாரணை அதிகாரிகளுக்கு மேலதிகாரிகள் தகவல் அளிக்கின்றனர். அத்துடன் தங்கள் வேலை முடிந்தது என்ற தவறான எண்ணத்துடன் வங்கிகள் இருக்கின்றன.

இங்கு நாங்கள் ஒரு விஷ யத்தைத் தெளிவுபடுத்த விரும்பு கிறோம். குற்றம் நடந்துள்ளதா, குற்றச்சாட்டில் உண்மையுள்ளதா என்ற கோணத்தில்தான் விசா ரணை நடக்கிறது. கடன் வழங்கு வதும் அதை வசூலிப்பதும் வங்கி களின் கடமை, தர்மம். இதை செய் வதற்கு வெளியாட்கள் யாரும் உதவ மாட்டார்கள். இவ்வாறு சிவிசி ஆணையர் பசின் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x