Published : 05 Dec 2015 10:35 AM
Last Updated : 05 Dec 2015 10:35 AM

மத்திய உணவு கழகம் சார்பில் 15 டன் உணவுப்பொருட்கள் தமிழகத்துக்கு அனுப்பிவைப்பு

கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள மத்திய உணவு ஆராய்ச்சி கழகம் சார்பில் தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு 15 டன் உணவுப் பொட்டலங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி கழகத்தின் (சிஎப்டிஆர்ஐ) இயக்குநர் இராம. ராஜசேகரன் கூறியதாவது:

தமிழகத்தில் மழை வெள்ளத்தில் சிக்கியுள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், ஆகிய மாவட்டங்களில் உணவுப் பொருட் களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட் டுள்ளது. பால், குடிநீர், உணவுப் பொருட்கள் கிடைக்காமல் குழந்தை களும், முதியவர்களும் தவித்து வரு கின்றனர். இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது.

எனவே மைசூருவில் உள்ள மத்திய உணவு ஆராய்ச்சி கழகத்தின் சார்பாக 6 ஆயிரம் ரொட்டி, 10 ஆயிரம் புளியோதரை பொட்டலங்கள், 11 ஆயிரம் பிரட், 5 ஆயிரம் பிஸ்கட் பாக்கெட், 25 ஆயிரம் லிட்டர் குடிநீர் உட்பட 9.5 டன் உணவுப் பொருட்கள் தயாரிக்கப்பட்டன. 300-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்களும், 200-க்கும் மேற்பட்ட மாணவர்களும் இரவு பகலாக இந்த உணவை தயாரித்துள்ளனர்.

இந்த உணவுப் பொருட்கள் சைக்கிள் பிராண்ட் அகர்பத்தி நிறுவனத்தின் இயக்குநர் ஜானவி மூர்த்தியின் உதவியுடன் லாரிகள் மூலம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவை நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு ராணுவ வீரர்கள் மூலம் விநியோகிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதேபோல மைசூருவில் உள்ள மத்திய அரசின் உணவு பாதுகாப்பு ஆராய்ச்சி ஆய்வக‌த் தின் (டிஎப்ஆர்எல்) சார்பில் சென்னைக்கு 5 டன் உணவுப் பொருட்கள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டன.

மைசூருவில் இருந்து தமிழகத் துக்கு உணவுப் பொருட்களை அனுப்பி வைத்த மத்திய அரசின் நிறுவனங்களுக்கு மைசூரு தமிழ்ச் சங்கத்தின் பொதுச்செயலாளர் புகழேந்தி நன்றி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x