Last Updated : 28 Jun, 2016 09:18 AM

 

Published : 28 Jun 2016 09:18 AM
Last Updated : 28 Jun 2016 09:18 AM

பொய்யும் வதந்தியும் பரப்புகிறது பாஜக: கூட்டணி கட்சியான சிவசேனா தாக்குதல்

மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆளும் கூட்டணியில் சிவசேனா இடம்பெற்றுள்ளது. என்றாலும் பாஜகவின் செயல்பாடுகளை அவ்வப்போது விமர்சித்து வரு கிறது. இந்நிலையில் கூட்டணியை விட்டு வெளியேறும் துணிவு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு உள்ளதா என பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் மாதவ் பண்டாரி கடந்த வாரம் சவால் விடுத்தார். இதையடுத்து அவரது உருவ பொம்மையை சிவசேனா தொண்டர்கள் எரித்தனர்.

இதைத் தொடர்ந்து மும்பை பாஜக தலைவர் ஆஷிஷ் ஷெலர் கூறும்போது, “எங்கள் தலைவர் களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் முயற்சிகளுக்கு எதிராக போராடும் ஜனநாயக உரிமை எங்களுக்கும் உள்ளது. பாஜக தொண்டர்களும் நாளேட்டை (சிவேசனாவின் அதி காரப்பூர்வ ‘சாம்னா’ இதழை) கொளுத்துவார்கள்” என்றார்.

இந்நிலையில் சிவசேனாவின் ‘சாம்னா’ இதழில் நேற்று வெளி யான தலையங்கத்தில் கூறியிருப்ப தாவது:

அரசியல் இருள் அடைந்துள் ளது. ஒவ்வொருவருக்கும் விமர்சனம் செய்யும் உரிமை உள்ளது. ஆனால் டெல்லி முதல் மகாராஷ்டிரா வரை உண்மையை பேச முயல்வோரின் குரல்கள் அடக்கப்படுகிறது. அரசியல் தலைக்கேறிவிட்டதற்கு இது ஒரு உதாரணம்.

சிவசேனாவுக்கு சவால் விட முயற்சி செய்பவர்கள் தங்கள் ஆடைக்கு தாங்களே தீவைத்துக் கொள்ள முயற்சிப்பவர்கள் ஆவர். வதந்தி விற்பனை அங்காடிகள் திறந்து வைத்துள்ள இவர்கள் கனவு களை விற்பனை செய்கின்றனர்.

பொய் மற்றும் வதந்திகளை பரப்புவது அடிப்படையிலான அரசியலை இவர்கள் கடைபிடித்து வருகின்றனர். சாம்னா இதழை எரிப்பது குறித்து இவர்கள் பேசினால், அது இந்துத்துவா, ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களையும் பிரதமர் நரேந்திர மோடியின் அடிப்படை கொள்கைகளையும் எரிப்பதற்கு சமமாகும் என்பதை இவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

சிவசேனாவுக்கு எதிரான இது போன்ற மிரட்டல்கள் தொடர்ந் தால், மோடி உருவாக்கி வரும் ஒவ்வொரு ஸ்மார்ட் நகரிலும் 5 முதல் 10 மனநல மருத்துவ மனைகளை தொடங்குமாறு எங்கள் கட்சி கோரிக்கை விடுக்கும். இவ்வாறு சிவசேனா கூறியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x