Last Updated : 30 Dec, 2016 09:59 AM

 

Published : 30 Dec 2016 09:59 AM
Last Updated : 30 Dec 2016 09:59 AM

பொது சிவில் சட்ட விவகாரம்: சட்ட ஆணையத்தின் கேள்விகளுக்கு பதிலளிக்க எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

பொது சிவில் சட்டம் தொடர்பான சட்ட ஆணையத்தின் கேள்வி களுக்கு காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், உத்தரப் பிரதேச தேர்தல் நடை பெற உள்ள நிலையில் இந்த கேள்விகள் எதற்கு என்று சட்டக் குழுவினரிடம் எதிர்கேள்வி எழுப்பி உள்ளன.

இந்தியாவில் பல்வேறு மதத் தினர் வாழ்கின்றனர். ஆனால், திருமணம், விவாகரத்து, சொத் துரிமை போன்றவற்றில் பொது வான சட்டம் இல்லை. குறிப்பாக முஸ்லிம்கள் ஷரியத் சட்டத்தைப் பின்பற்றுகின்றனர். இந்நிலையில், இந்தியாவில் வாழும் அனை வருக்கும் சமமான பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வர பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு முஸ்லிம் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், பொது சிவில் சட்டம் தொடர்பாக 16 கேள்விகளை மத்திய சட்ட ஆணையம் தயாரித்து கடந்த அக்டோபர் மாதம் 7-ம் தேதி வெளியிட்டது. இந்தக் கேள்விகளுக்கு பதில், கருத்து தெரிவிக்கும்படி பொது மக்கள் மற்றும் அனைத்துக் கட்சியினரையும் சட்ட ஆணை யம் கேட்டுக் கொண்டது. இது தொடர்பாக சட்டக் குழுவிடம் எதிர்க்கட்சியினர் தங்கள் ஆட்சே பனைகளைக் கூறியுள்ளனர். குறிப்பாக பொது சிவில் சட்டத்தை ஆதரிக்கிறீர்களா இல்லையா என்ற கேள்விகளுக்கு முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ், பகுஜன் சமாஜ், திரிணமூல் காங்கிரஸ் உட்பட பல கட்சிகள் பதில் அளிக்காமல் தவிர்த்துள்ளன.

சட்ட குழுவிடம் பகுஜன் சமாஜ் கட்சி கூறும்போது, ‘‘ஆர்எஸ்எஸ் கொள்கைகளை திணிக்க பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்’’ என்று குற்றம் சாட்டியுள்ளது. கேள்வி களுக்குப் பதில் அளிக்காமல், கடந்த அக்டோபர் மாதம் 25-ம் தேதி கட்சித் தலைவர் மாயாவதி இதுதொடர்பாக லக்னோவில் வெளியிட்ட அறிக்கையை கேள்வித்தாளுடன் இணைத்துள் ளோம் என்று கூறிவிட்டது. உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த கேள்விகளை வெளியிட வேண்டிய அவசியம் என்ன என்று சில எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பி உள்ளனர்.

அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம், சட்ட ஆணை யத்தின் கேள்விகள் தேவையில்லா தது என்று நிராகரித்துள்ளது.

ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதின் ஓவைசிஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகியவையும் பொது சிவில் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. எனினும், மும்முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் நடைமுறைக்கு தேசிய வாத காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. எனினும், தனிநபர் சட்டம் தேவை என்று கூறியுள்ளது.

இதுகுறித்து சட்டக் குழு வட் டாரங்கள் கூறும்போது, ‘‘பொது சிவில் சட்டம் தொடர்பான கருத்து கேட்பு முடிந்த பிறகும் நிறைய ஆலோசனைகள் குவிந்து வருகின் றன. இதுவரை 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கள் கருத்துகளைக் கூறியுள்ளனர்’’ என்று தெரிவித்தன.

சட்ட ஆணையம் கூறும்போது, ‘‘பொது சிவில் சட்டம் என்பது மிக முக்கியமான திட்டம். இதுதொடர்பாக வந்துள்ள பதில் களைப் பரிசீலித்து வருகிறோம். காலக் கெடு முடிந்த பிறகு வரும் ஆலோசனைகள், பதில் களையும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வோம்’’ என்று தெரிவித் துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x