Last Updated : 16 May, 2016 07:34 PM

 

Published : 16 May 2016 07:34 PM
Last Updated : 16 May 2016 07:34 PM

பாதுகாப்பும் சுதந்திரமும் உறுதி செய்யப்பட்டால் இந்தியா வரத் தயார்: விஜய் மல்லையா

தனது பாதுகாப்பும் சுதந்திரமும் உறுதிப்படுத்தப்பட்டால் இந்தியாவிற்கு வரத் தயாராக இருப்பதாக யுனைடெட் பிரூவெரிஸ் நிர்வாகக் குழு கூட்டத்தில் தொழிலதிபர் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார். மேலும் எஸ்பிஐ வங்கியின் கடனை அடைப்பதற்கு புதிய திட்டம் ஒன்றை தான் தயாரித்துள்ளதாகவும், அதுபோல ஏனைய வங்கிகளின் கடன்களையும் தான் தீர்ப்பதற்குத் தயாராக உள்ளதாக மல்லையா கூறியுள்ளார்.

யுனைடெட் பிரூவெரிஸ் நிறுவனத்தின் இயக்குநர் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை மும்பையில் நடைப்பெற்றது. இந்தக் கூட்டத்தில் லண்டனிலிருந்து டெலி கான்பரன்ஸ் முறையில் பங்கு பெற்ற விஜய் மல்லையா, தன் மீதான அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் சொல்லத் தயாராக இருப்பதாக கூறினார். இதற்காக இந்தியாவுக்கு வரத் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

விஜய் மல்லையா கிங்க்பிஷர் நிறுவனத்திற்காக வங்கிகளிடம் வாங்கிய 9,400 கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தவில்லை. அவரிடமிருந்து கடனை திருப்பி வாங்குவதற்கு வங்கிகள் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றன. கடந்த மார்ச் 2-ம் தேதியிலிருந்து விஜய் மல்லையா லண்டனில் வசித்து வருகிறார். அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளது. மேலும் அவரை இந்தியா அழைத்து வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

``பாதுகாப்பும் சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டால் இந்தியாவிற்கு வந்து தன் மீதான அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க தயாராக உள்ளதாக விஜய் மல்லையா கூறினார் என்று இயக்குநர் கூட்டத்தில் பங்கேற்ற இயக்குநர் குழு உறுப்பினர் கிரண் மஜூம்தார் தெரிவித்துள்ளார். மேலும் நிறுவனத்தின் செயல்பாடுகள் மிகச் சிறப்பாக செயல்பட்டன. நிறுவன நிர்வாக பிரச்சினைகளும் இல்லை ஆனால் இதற்கு விஜய் மல்லையாவை காரணமாக கூற முடியாது என்று தெரிவித்தார். ஆனால் இதுபற்றி விஜய் மல்லையா கருத்து தெரிவிக்கவில்லை.

விஜய் மல்லையா விவகாரத்தில் நிர்வாகிகள் தெளிவாக இருக்கின்றனர். மேலும் விஜய் மல்லையாவிற்கு உறுதுனையாக இருப்போம். ஆதராமற்ற கையகப்படுத்துதலுக்கு துணை போக மாட்டோம் என்று ஹெய்ன்கென் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மற்றொரு இயக்குநர் குழு உறுப்பினரான சுனில் அலாக், மல்லையா வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருக்கிறார் என்று தெரிவித்தார். மேலும் `` என்னை தவறாக குற்றம் சாட்டுகின்றனர். நான் கடனை திருப்பி செலுத்துவதுதான் என்னுடைய நோக்கம்’’ என்று விஜய் மல்லையா தன்னிடம் தெரிவித்ததாக கூறினார்.

ஹெய்ன்ஹென் நிறுவனம் யுனைடெட் பிரூவெரிஸ் நிறுவனத்தை கையக்கபடுத்தியதாகவும் மல்லையாவை தலைவர் பதவியிலிருந்து நீக்கவேண்டும் என்று ஊகங்கள் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன. ஹெய்ன்கென் நிறுவனம் 2008-ம் ஆண்டு யுனைடெட் பிரூவெரிஸ் நிறுவனத்தினுடைய 37.5 சதவீத பங்குகளை வாங்கியது. அதன் பிறகு 42.4 சதவீத பங்குகளை கையகப்படுத்தியது. மேலும் முதலீட்டு வங்கியான ஜேஎம் பைனான்ஸ் மூலமாக வெளிச்சந்தையில் பங்குகளை வாங்கியது. அது மட்டுமல்லாமல் இசிஎல் பைனான்ஸ் மற்றும் யெஸ் வங்கியிடமிருந்து யுனைடெட் பிரிவெரீஸ் பங்குகளையுன் வாங்கியது குறிப்பிடத்தக்கது.

``பண மோசடி வழக்கில் என்னை தவறாக குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும் இந்த குற்றங்களை நிரூபிப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. மேலும் கிங்க்பிஷர் நிறுவன ஊழியர்களுக்கு வழங்கவேண்டிய ஊதியத்தை யுனைடெட் பிரூவெரிஸ் ஹோல்டிங்க்ஸ் மூலமாக வழங்க முயற்சித்து வருகிறேன். மேலும் கர்நாடக உயர்நீதிமன்றம் சொத்துக்களை மற்றும் கணக்குகளை முடக்கிவைத்துள்ளதால் ஊதிய பாக்கியை வழங்குவதற்கு தாமதம் ஏற்படுகிறது’’ என்று விஜய் மல்லையா தெரிவித்ததாக இயக்குநர் குழு உறுப்பினர் சிஒய் பால் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x