Last Updated : 23 May, 2015 08:23 AM

 

Published : 23 May 2015 08:23 AM
Last Updated : 23 May 2015 08:23 AM

பனாரஸ் பட்டு வளர்ச்சிக்கு மத்திய ஜவுளித்துறை முயற்சி

பிரபல ‘ஆடை வடிவமைப்பாளர் கள்’ உதவியுடன் பனாரஸ் பட்டு கைத்தறி சேலைகள் விற்பனை வளர்ச்சிக்கு மத்திய ஜவுளித் துறை திட்டமிட்டு வருகிறது.

பனாரஸ் பட்டுச் சேலைகள் மீதான மோகம் சமீபகாலமாக குறைந்து வருவதால் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் அதை மீண்டும் பிரபலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் காசி என்கிற வாரணாசி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் பல நூற் றாண்டுகளாக கைத்தறி மற்றும் விசைத்தறிகளால் பனாரஸ் பட்டுச் சேலைகள் தயாராகி வருகின்றன.

உலகப் புகழ் பெற்ற இந்த சேலைகளின் முக்கியத்துவம் தற்போது குறைந்து வருவதுடன், அதன் விற்பனையிலும் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள கைத்தறி நெசவாளர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்கு வாரணாசி, பிரதமர் மோடியின் மக்களவை தொகுதியாக இருப் பதும் முக்கிய காரணம் ஆகும்.

இதற்கான முயற்சியில் பாரதிய ஜனதாவின் தேசிய நிர்வாகியும் பேஷன் டிசைனருமான என்.சி.ஷைய்னா இறங்கியுள்ளார். இதையொட்டி அவர், மத்திய ஜவுளித்துறை அமைச்சரான சந்தோஷ் கங்வாரை அண்மையில் டெல்லியில் சந்தித்து பேசினார்.

இதுகுறித்து ’தி இந்து’விடம் ஷைனா கூறும்போது, “பெண் களிடையே சுடிதார் அணியும் பழக்கம் பரவலாக அதிகரித்துள்ள தால், 9 கெஜம் பட்டுச் சேலை களின் பயன்பாடு குறையத் தொடங்கியுள்ளது. இதனால் நெசவாளர்கள் பாதிக்கப்படுவதால், அவர்களின் வாழ்வாதாரத்தை காப்பது குறித்து அமைச்சருடன் ஆலோசனை நடத்தினேன்.

இந்த ஆலோசனையில், பனாரஸ் பட்டுச் சேலைகளை ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் பிரபலப்படுத்தும் பணியில் பிரபல பேஷன் ஜவுளி டிசனைர்களான ரித்து குமார், மணிஷ் மல்ஹோத்ரா, சந்தீப் கோஷ்லா, ஸ்ருதி சஞ்சேட்டி, அனிதா டோங்ரே, ரினா டாக்கா உள்ளிட்ட பலரை ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டது” என்றார்.

‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் மேலும், பல நெசவுத்தொழிற்சாலைகளும் வாரணாசியில் அமைக்கப்பட உள்ளன. இதில், தயாரிக்கப்படும் பனராஸ் பட்டுச் சேலைகளின் கைத்தறி நெசவாளிகளுக்கு உரிய கூலி கிடைக்கும் வகையிலும் அதன் விலை நிர்ணயம் செய்யப்பட உள்ளது.

இந்த சேலைகள் பிரபல ஆடை வடிவமைப்பாளர்கள் வடிவமைப்பில் தயாரிக்கப்பட்டு, அவற்றுக்கு அரசு செலவில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் விளம்பரம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பனாரஸ் பட்டு கைத்தறி நெசவுத்தொழிலில் ஈடுபட்டுள்ள தனியார் தயாரிப்பாளர்களின் சேலைகளை பிரபலப்படுத்தும் முயற்சியிலும் அரசு உதவ இருக்கிறது. இதற்காக தனியார் நெசவாளர்களிடமும் ஷைனா ஏற்கெனவே பேச்சு நடத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x