Published : 06 Jan 2015 10:37 AM
Last Updated : 06 Jan 2015 10:37 AM

பக்தர்களின் கூட்ட நெரிசலை குறைக்க திருப்பதி தரிசன டிக்கெட்டுகள்: தபால் நிலையங்களில் விற்பனை

திருப்பதி ஏழுமலையானை எளிதில் தரிசிக்க, ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களில் தபால் நிலையங்கள் மூலம் தரிசன டிக்கெட்டுகள் விற்பனை நேற்று தொடங்கியது.

பக்தர்களின் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் நேற்று முதல் ஆந்திரம், தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களில் உள்ள 95 தலைமை தபால் நிலையங்களில் ரூ. 300, ரூ. 50 ஆகிய தரிசன டிக்கெட் விற்பனையை தொடங்கியது.

திருப்பதி தலைமை தபால் நிலையத்தில் தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி சாம்பசிவ ராவ் விற்பனையை தொடங்கி வைத்து பேசும்போது, “கடந்த டிசம்பர் 1-ம் தேதி முதல் இந்த இரு மாநிலங் களிலும் உள்ள 5 மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. இதற்கு நல்ல வரவேற்பு இருந்ததால், இத்திட்டம் விரிவு படுத்தப்படுகிறது.

விரைவில், தபால் நிலையங்களில் இணைய தள டிக்கெட்டுகளும் விற்பனை செய்யும் திட்டம் தொடங்கப்படும்.

தபால் நிலையங்கள் மூலம் திருமலையில் பக்தர்கள் தங்கும் விடுதி, திருமண மண்டபம் போன்றவைகளும் முன்பதிவு செய்யும் திட்டமும் பரிசீலிக்கப்படும்” என்றார்.

இந்நிகழ்ச்சியில், அஞ்சல் துறை தலைவர் பி.வி. சுதாகர் மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x