Last Updated : 06 Jan, 2015 10:28 AM

 

Published : 06 Jan 2015 10:28 AM
Last Updated : 06 Jan 2015 10:28 AM

நக்ஸலைட் செயல்களை நியாயப்படுத்தி பேசி சர்ச்சையில் சிக்கினார் பிஹார் முதல்வர் மாஞ்சி

அரசு ஒப்பந்ததாரர்களை மிரட்டி நக்ஸலைட்டுகள் பணம் பறிப் பதை நியாயப்படுத்தி பேசியதன் மூலம் சர்ச்சையில் சிக்கியுள்ளார் பிஹார் முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சி.

ஜிதன் ராம் மாஞ்சி நேற்று பாட்னாவில் தனது இல்லத்தில், ஜனதா தர்பார் (மக்களின் குறை களை அறிதல்) நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர், “நக்ஸலைட்டு கள் என்ன வெளிநாட்டினரா? அவர்களும் நமது சமூகத்தைச் சேர்ந்தவர்களே. அவர்களை தேசிய நீரோட்டத்தில் கொண்டு வரவேண்டும். அவர்களை துப்பாக்கியுடன் காட்டுவதை விடுத்து வளர்ச்சிப் பணிகள் மூலம் இதை செய்யவேண்டும்.

நக்ஸலைட்டுகளை பேச்சு வார்த்தைக்கு அழைப்பீர்களா என்று கேட்கிறீர்கள். ஏன் கூடாது? பல்வேறு முதல்வர்கள், ஜெயபிர காஷ் நாராயணன் போன்ற தலை வர்கள் நக்ஸலைட்டுகளை சந்தித்து வன்முறையை கைவிடுமாறு கூறி யுள்ளனர். இப்படி நான் கூறுவதால் நக்ஸலைட்டுகளை எதிர்த்துப் போரிடும் பாதுகாப்பு படையினரின் மனஉறுதி பாதிக்கும் என்று கருதவில்லை.

3 ஆண்டுகளுக்கு முன் நான் அமைச்சராக இருந்தபோது நக்ஸ லைட்டுகள் சிலர் என்னை சந்தித் தனர். அரசுப் பொறியாளர்களுடன் அரசு ஒப்பந்ததாரர்கள் கள்ள உறவு வைத்துக்கொண்டு ரூ. 3 - 4 லட்சம் மதிப்பிலான பணியை ரூ.11 லட்சத்துக்கு பெறுவதாகவும் இதன் மூலம் தரமற்ற பணியை செய்துவிட்டு ஒப்பந்ததாரர்கள் ரூ. 7 - 8 லட்சம் லாபம் அடை வதாகவும் என்னிடம் கூறினார்கள்.

ரூ. 7 லட்சம் லாபம் சம்பாதிக் கும் ஒப்பந்ததார்களை மிரட்டி நக்ஸலைட்டுகள் ரூ.1 லட்சம் பெறு வதை என்னால் தவறாக பார்க்க முடியவில்லை” என்றார்.

நக்ஸலைட்டு செயல்களை நியாயப்படுத்தும் மாஞ்சியின் இந்தக் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மாஞ்சி மேலும் கூறும்போது, “அமைச்சர்கள் என் பேச்சை மதிப்பதில்லை என்று நான் கூறிய தாக உண்மைக்கு மாறான தகவல் பத்திரிகைகளில் வந்துள்ளது. அமைச்சரவை கூட்டங்களில் கருத்து வேறுபாடு வருகிறது. இறுதியில் எனது முடிவு ஏற்றுக் கொள்ளப்படுகிறது என்றுதான் நான் கூறினேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x