Published : 14 Aug 2015 06:33 AM
Last Updated : 14 Aug 2015 06:33 AM

தொழில்நுட்ப கோளாறு தடைபட்ட திருப்பதி லட்டு விற்பனை

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக‌ பல மணி நேரம் லட்டு பிரசாத விநியோகம் தடைப்பட்டது. இதனால் பக்தர் கள் ஆத்திரமடைந்து ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினமும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இவர்களுக்கு தினமும் சுமார் 3 லட்சம் லட்டு பிரசாதங்கள் விநியோகம் செய்யப்படுகின்றன‌.

இந்நிலையில், நேற்று மதியம் லட்டு விநியோகம் செய்யும் மையத்தில் திடீரென தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டு, கணினி கள் இயங்கவில்லை. எனவே, லட்டு விநியோகம் தடைப்பட்டது.

இதனால், லட்டு பிரசாதம் வாங்க ஆவலுடன் வரிசையில் காத்திருந்த பக்தர்கள் பொறுமை இழந்து தேவஸ்தான ஊழியர்க ளுடன் தகராறில் ஈடுபட்டு ஆர்ப் பாட்டம் நடத்தினர். தகவல் அறிந் ததும் தேவஸ்தான உயர் அதிகாரி கள் மற்றும் தொழில்நுட்ப அதிகாரி கள் விரைந்து சென்று பக்தர்களை சமாதானப்படுத்தினர். ஆயினும் சுமார் 3 மணி நேரம் கழித்தே மீண்டும் லட்டு பிரசாதங்கள் விநியோகம் செய்யப்பட்டன‌.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x