Last Updated : 18 Jan, 2017 04:04 PM

 

Published : 18 Jan 2017 04:04 PM
Last Updated : 18 Jan 2017 04:04 PM

தேர்தல் மாநிலங்களிலிருந்து 64 கோடி ரொக்கம், போதைப்பொருட்கள், மதுபானங்கள் கைப்பற்றல்

5 மாநில தேர்தல்களையொட்டி விழிப்பாகச் செயல்பட்டு வரும் தேர்தல் ஆணையம் பெருமளவு ரொக்கம், உ.பி.யில் மதுபானங்கள், பஞ்சாபில் போதை மருந்துகள் ஆகியவற்றைக் கைப்பற்றியுள்ளன.

தேர்தல் ஆணையத்தினால் நியமிக்கப்பட்ட கண்காணிப்பு மற்றும் செலவின எச்சரிக்கைக் குழுக்கள் உ.பி.யிலிருந்து மட்டும் ரூ.56.04 கோடி ரொக்கம் மற்றும் ரூ.8 கோடி பெறுமான போதை மருந்துகள் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளன.

பஞ்சாபில் ரூ.1.78 கோடி மதிப்புள்ள ஹெராயின் உள்ளிட்ட போதைப்பொருட்களும், கோவா மற்றும் மணிப்பூரில் முறையே ரூ.16.72 லட்சம், ரூ.7 லட்சம் பெறுமான போதைப்பொருட்கள் பிடிபட்டுள்ளன.

உத்தரப் பிரதேசத்தில் சுமார் 2 லட்சம் லிட்டர்கள் மதுபான வகைகள், அதாவது ரூ.6.06 கோடி பெறுமான மதுபான வகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. பஞ்சாபில் 10,646 லிட்டர்கள் ஸ்பிரிட் கைப்பற்றப்பட்டுள்ளன

மொத்தமாக ரூ.64.38 கோடி ரொக்கமாகவும் ரூ.6.23 கோடி பெறுமான மதுபானங்கள், ரூ.2 கோடி பெறுமான போதைபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

உ.பி.யில் பிடிபட்ட ரூ.56.04 கோடி ரொக்கத்தில் ரூ.31.65 லட்சம் பழைய நோட்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது. பஞ்சாபில் ரூ.8.17 கோடி ரொக்கம், உத்தராகண்டில் ரூ.10 லட்சமும், மணிப்பூரில் ரூ.6.95 லட்சம் ரொக்கமும் கைப்பற்றப்பட்டன.

5 மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் பிப்ரவரி 4ம் தேதி முதல் மார்ச் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது. வாக்குகள் எண்ணிக்கை அனைத்து மாநிலங்களுக்கும் மார்ச் 11-ம் தேதி நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x