Last Updated : 16 Sep, 2016 11:15 AM

 

Published : 16 Sep 2016 11:15 AM
Last Updated : 16 Sep 2016 11:15 AM

தேர்தல் பணியாற்றும் போலீஸாருக்கு ஊதியம்

தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் மத்திய, மாநில போலீஸாருக்கு அதற்கான பணப்பயன் (மதிப்பூதி யம்) அளிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கடினமான சூழல்களிலும் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் பாதுகாப்பாகவும் தேர்தல் நடை பெற மத்திய மாநில போலீஸார் உதவுகின்றனர். இவர்களின் தேர்தல் பணி சிலசமயங்களில் 2 மாதங்கள் வரை நீள்கிறது. எனவே, அவர்களின் சிறப்புப் பணிக்காக உரிய மதிப்பூதியம் வழங்கப்படும். இடைத்தேர்தல்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

15 மற்றும் அதற்கு குறைவான நாட்கள் பணியில் ஈடுபட்டால் குறைந்தபட்ச மதிப்பூதியமாக அதிகாரிகளுக்கு ரூ.2,500, துணை நிலை அதிகாரிகளுக்கு ரூ.2,000, இதர தரநிலை அதிகாரிகளுக்கு ரூ.1,500 வழங்கப்படும். 15 நாட் களுக்கும் அதிகமானால் இத் தொகை ஒவ்வொரு கூடுதல் வாரத் துக்கும் ரூ.1,250, ரூ.1,000, ரூ.750 என கணக்கிட்டு வழங்கப்படும்.

எனினும் அதிகபட்ச மதிப்பூதி யம் பணியில் ஈடுபடும் நபரின் ஒரு மாத மொத்த ஊதியத்துக்கு மிகாமல் இருக்கும். மக்களவைத் தேர்தலாக இருப்பின், இந்த மதிப் பூதியத்தை மத்திய அரசு வழங்கும். சட்டப்பேரவைத் தேர்தல்களில் தொடர்புடைய மாநில அரசுகள் வழங்கும். இரு தேர்தல்களும் ஒரே சமயத்தில் நடைபெற்றால், செலவை மத்திய மாநில அரசுகள் சரிபாதியாக பகிர்ந்து கொள்ளும்.

இந்த உத்தரவு வரும்காலத்தில் அமலுக்கு வரும். முன்தேதியிட்டு அமல்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x