Last Updated : 05 Jan, 2017 09:29 AM

 

Published : 05 Jan 2017 09:29 AM
Last Updated : 05 Jan 2017 09:29 AM

தேர்தல் ஆணையம் உடனே முடிவு எடுக்காததால்: கட்சிப் பிளவுகளில் முடங்கும் சின்னங்கள்

உ.பி. சட்டப்பேரவைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு ஆளும் சமாஜ்வாதி கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. கட்சியின் தேசிய தலைவர் முலாயம் சிங் யாதவ் மற்றும் அவரது மகனும் முதல்வருமான அகிலேஷ் சிங் யாதவ் இடையே மோதல் கிளம்பி யுள்ளது. இதில் சமாஜ்வாதி கட்சி யின் தேர்தல் சின்னமான சைக்கிள் தங்களுக்கே உரியது என தேர்தல் ஆணையத்திடம் முலாயம் முறை யிட்டுள்ளார். இதையே அகிலேஷ் யாதவும் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், கட்சியின் உண்மையான தலைவர் யார்? தேர்தல் சின்னம் யாருக்கு சொந்தம்? என்பதில் தேர்தல் ஆணையம் உடனடியாக முடிவு எடுப்பதாகத் தெரியவில்லை. கட்சிக்கானப் பதிவு மற்றும் அதன் சின்னங்களை ஒதுக்கும் உரிமை படைத்த தேர்தல் ஆணையம், அதில் கிளம்பும் பிரச்சினைகளைச் சந்திக்கத் தயங்கு வதாகத் தெரிகிறது. தேர்தல் கால மாக இருந்தாலும் சம்பந்தப்பட்ட கட்சிக்கு ஏற்படும் நஷ்டத்தையும் பொருட்படுத்தாமல் அதன் சின் னத்தை முதல் வேலையாக தேர்தல் ஆணையம் முடக்கி விடுகிறது. இதனால் தேர்தலில் அக்கட்சிக்கு வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படுகிறது.

இது குறித்து ‘தி இந்து’விடம் தேர்தல் ஆணைய வட்டாரத்தில் கூறும்போது, “கட்சிப் பிளவுகள் மீது முடிவு எடுக்க தனியே தேர்தல் சட்ட விதிகள் உள்ளன. இதன்படி, இரு தரப்பினருக்கும் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்க எங்களுக்கு குறைந்தது 4 மாதங்கள் ஆகும். இதற்கு முன்பாக முடிவு கிடைக்க வேண்டும் எனில் சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன்றம் செல்வதைத் தவிர வேறு வழி யில்லை” என்று தெரிவித்தனர்.

அரசியல் கட்சிகளின் சின்னங் களைத் தேர்தல் ஆணையம் முடக்கு வது புதிதல்ல. 1969-ல் காங்கிரஸ் பிளவுபட்டபோது, இதன் ஒரு பிரிவுக்கு தலைமை வகித்த இந்திரா காந்தி, கட்சிப் பெயருடன் தனது பெயரைச் சேர்த்துக்கொண்டார். தாங்களே உண்மையான காங்கிரஸ் கட்சியினர் என்று கூறிய அவர் அதன் நுகத்தடி பூட்டிய காளைகள் சின்னத்தை கைப்பற்ற விரும்பினார். ஆனால் தேர்தல் ஆணையத்தால் அது முடக்கப்பட்டதால், புதிதாக பசுவும் கன்றும் சின்னத்தில் இந்திரா போட்டியிட்டார்.

1977-ல் காங்கிரஸ் தோல்வி அடைந்தபோது, பசு-கன்று என்பது இந்திராவும் அவரது மகன் சஞ்சய் காந்தியும் என கடும் விமர்சனம் கிளம்பியது. இதனால், பசுவும் கன்றும் சின்னத்தை கைவிட்ட இந்திரா, கை சின்னத்தை கேட்டுப் பெற்றார். புத்தர் ஆசி வழங்குவ தாகக் கருதப்படும் கை சின்னம் இதற்கு முன் 1951-ல் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் ரைக்கர் பிரிவிடம் இருந்தது.

1987-ல் எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு அதிமுக பிளவுபட்டு, ஜானகி அணி, ஜெயலலிதா அணி என இரு அணிகள் உருவானதால் அக் கட்சியின் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. இதனால் 1989-ல் நடைபெற்ற தேர்தலில் ஜானகி அணிக்கு இரட்டை புறாவும், ஜெய லலிதா அணிக்கு சேவலும் சின்ன மாக ஒதுக்கப்பட்டது. இத்தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு இரு அணிகளும் ஒன்றாக இணைந்தன. இதனால் அதிமுகவுக்கு மீண்டும் இரட்டை இலை கிடைத்தது. 1991-ல் இச்சின்னத்தில் போட்டியிட்ட ஜெயலலிதா முதல்வர் ஆனார்.

இந்தச் சின்னம் தமிழக விவசாய சங்கத்தின் சார்பில் சுயேச்சையாக போட்டியிட்ட பெரியசாமிக்கு ஒதுக் கப்பட்டிருந்தது. இதை முதல் முறையாக பெற்ற எம்ஜிஆர் 1973-ன் மக்களவை இடைதேர்தலுக்காக திண்டுக்கல்லில் மாயத்தேவரை நிறுத்தி வெற்றி பெற வைத்தார்.

ஆந்திராவில் தெலுங்தேசம் கட்சியின் நிறுவனர் என்.டி.ராமா ராவ், அவரது மருமகன் சந்திரபாபு நாயுடு இடையிலான பிரச்சினை யால் 1995-ல் அக்கட்சி பிளவுபட்டது. அப்போது, தேர்தல் ஏதும் நடை பெறாததால் அக்கட்சியின் சைக்கிள் சின்னத்தை முடக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x