Published : 16 May 2016 10:49 AM
Last Updated : 16 May 2016 10:49 AM

தெலங்கானா சாலை விபத்தில் 16 பேர் பலி: ஆந்திராவில் மண் சரிந்து 7 தொழிலாளர்கள் உயிரிழப்பு

தெலங்கானாவில் ஷேர் ஆட்டோ மீது லாரி மோதியதில் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது போல ஆந்திராவில் கட்டுமான பணிக்காக மண் தோண் டும்போது மணல்மேடு சரிந்ததில் 7 தொழிலாளர்கள் பலியாயினர்.

மகாராஷ்டிர மாநிலம், பல்லாடு கிராமத்தைச் சேர்ந்த செங்கல் சூளை தொழிலாளர்கள் தெலங்கானாவின் நிஜாமாபாத் மாவட்டம், நவி பேட்டா பகுதியில் வசித்து வந்தனர். இவர்கள் நேர்த்திக் கடன் செலுத்துவதற் காக, நேற்று அதிகாலையில் ஆதிலாபாதில் உள்ள அம்மன் கோயிலுக்கு ஷேர் ஆட்டோவில் சென்றுள்ளனர்.

அப்போது, எதிரில் ஜல்லி கற்களை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக வந்த டிப்பர் லாரி எதிர்பாராதவிதமாக ஷேர் ஆட்டோ மீது மோதியது. இந்த கோர விபத்தில் ஷேர் ஆட்டோவில் பயணம் செய்த 16 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்களில் 7 சிறுவர்கள், 5 பெண்களும் அடங்குவர். மேலும் இதில் படுகாயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பைன்சா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஷேர் ஆட்டோவில் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிக் கொண்டு சென்றதும், டிப்பர் லாரி அதிவேகமாக சென்றதும்தான் இந்த விபத்துக் குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந் துள்ளது.

இதுகுறித்த தகவல் அறிந்த தெலங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ், விபத்தில் பலியானவர் களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித் துள்ளார். காயமடைந்தவர் களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

மணல்மேடு சரிந்து 7 பேர் பலி

ஆந்திர மாநிலம் குண்டூரில் மிகப்பெரிய வணிக வளாகம் கட்டும் பணி கடந்த 3 மாதங்க ளாக நடைபெற்று வருகிறது. சனிக் கிழமை இரவு தோண்டும் பணியில் 18 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென மணல் மேடு சரிந்ததில் 8 தொழிலாளர்கள் மண்ணில் புதையுண்டனர்.

உடனடியாக இவர்களை மீட்க அங்கிருந்த தொழிலாளர்கள் போராடினர். இதனிடையே தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாரும் தீயணைப்புப் படையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதில் ஒருவரை மட்டுமே உயிருடன் மீட்க முடிந்தது. மற்ற 7 பேரையும் சடலமாக மீட்டு பிரேத பரிசோதனைக்காக குண்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உயிரிழந்தவர்கள் அனை வரும் குண்டூர் மாவட்டம் பெதகொட்டி பாடு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. அமைச்சர் ரேவல கிஷோர் பாபு மற்றும் அரசு அதிகாரிகள் நேற்று காலையில் சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டனர்.

உயிரிழந்த தொழிலாளர் களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்று அமைச்சர் கிஷோர் பாபு தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x