Last Updated : 31 May, 2016 09:43 AM

 

Published : 31 May 2016 09:43 AM
Last Updated : 31 May 2016 09:43 AM

தலைநகர் டெல்லியில் அன்றாடம் 105 வாகனங்கள் திருட்டு: சென்னை பெருவெள்ளத்தின் பெயரில் பாகங்கள் விற்பனை

நாட்டின் தலைநகரான டெல்லி யில் அன்றாடம் 105 வாகனங்கள் திருட்டுப் போவதாக புள்ளிவிவ ரம் தெரிவிக்கிறது. இது கடந்த ஆண்டை விட 40 சதவீதம் அதிகம் ஆகும். இந்த வாகனங் களின் பாகங்கள், சமீபத்திய சென்னை பெருவெள் ளத்தின் பெயரில் விற்கப்பட்டதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

டெல்லி போலீஸாரிடம் பதி வாகியுள்ள புகார்களின்படி கடந்த ஜனவரி 1 முதல் ஏப்ரல் 15 வரை யிலான நான்கரை மாதத்தில் டெல்லியில் 11,116 வாகனங்கள் திருடப்பட்டுள்ளன. கடந்த 2015-ம் ஆண்டு இதே காலகட்டத்தில் திருட்டுபோன வாகனங்களின் எண்ணிக்கை 8,000 ஆகும். இந்நிலையில் இதுவரை இல்லாத அளவு இந்த ஆண்டு வாகனத் திருட்டு அதிகரித்துள்ளது.

வாகனத் திருட்டு புகார்களை கடந்த 2001 முதல் டெல்லி போலீஸார் ஒட்டுமொத்தமாக கணக்கிட்டு வருகின்றனர். இதில் முதல் ஆண்டில் அன்றாடம் 22 வாகனங்கள் திருட்டுபோனதாக தெரியவந்தது. இதன் பிறகு குறிப்பிடும்படி உயராமல் இருந்த எண்ணிக்கை, 2015-ல் 90 ஆக உயர்ந்தது. எனினும் இந்த திருட்டு வாகனங்கள் மீட்கப்படுவது வெறும் 5 சதவீதமாகவே உள்ளது. கடந்த 2015 வரையும் கூட இந்த 5 சதவீதத் தில் பெரிய முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.

கடந்த 2001 முதல் வாகனத் திருட்டு புகார்களை டெல்லி போலீஸார் முறையாக பதிவு செய்து வருகின்றனர். இதே வகையில், குறிப்பிட்ட காலத்தில் கண்டுபிடிக்கப்படாத வாகனங்க ளுக்கு அதற்கான சான்றிதழ்களும் அளித்து வருகின்றனர். இதனால் வாகன உரிமையாளர்கள் காப்பீட் டுத் தொகை பெற முடிகிறது.

இது குறித்து ‘தி இந்து’விடம் டெல்லி போலீஸ் அதிகாரிகள் வட்டாரம் கூறும்போது, “திருடப் படும் வாகனங்கள் உடனடியாக பிரிக்கப்பட்டு, அதன் பாகங் கள் உ.பி.யின் மீரட் மற்றும் முசாபர் நகர் வாகனச் சந்தை களில் விற்கப்பட்டு விடுகின் றன. இதனால் அவற்றை கண்டுபிடிப்பது மிகவும் சிரமமாக உள்ளது. இவற்றில் பல வாகனங்களின் கூடுகளை, சென்னையில் வந்த பெரு வெள்ளத்தில் சேதமானவை எனக் கூறி இணையதளம் மூலமாக ஏலம் விடப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றின் உட்புற உதிரி பாகங்கள் கழற்றப்பட்டு, தனித்தனியாக விற்கப்பட்டு விடுகிறது. ஆனால் இவை அனைத்தும் டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள நகரங்களில் திருடப்பட்டவை ஆகும். இதுபோன்ற 20 கும்பலை கடந்த ஏப்ரல் 1 முதல் 15 வரை பிடித்து அவர்களிடம் 110 வாகனங்கள் கைப்பற்றி உள்ளோம்” என்று தெரிவித்தனர்.

இதுபோன்ற காரணங்களால், மீரட் மற்றும் முசாபர் நகர் பழைய வாகனச் சந்தையில் ‘ஆர்டர்’ அளிப் போருக்கு இரு நாட்களில் உதி ரிபாகங்களை இணைத்து புதிய வாகனம் தரப்படுகிறது. இவற்றின் இன்ஜின்களில் போலி எண்கள் பொறிக்கப்பட்டு, அதை குறிப்பிட்ட நகரங்களின் போக்குவரத்து அலு வலக அதிகாரிகள் பதிவு செய்து தருகின்றனர். இந்த விஷயம் வெளியானதால், கடந்த ஆண்டு உ.பி.யின் ஜான்சியில் உள்ள போக்குவரத்து அலுவலர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர்.

புதிய வாகனங்கள் வாங்கும் சிலர் அதே மாடல் மற்றும் நிறத்தில் உதிரி பாகங்களால் தயா ரிக்கப்படும் வாகனம் ஒன்றையும் வாங்கிக் கொள்கின்றனர். பிறகு 2 வாகனங்களிலும் ஒரே பதிவு எண்ணை பயன்படுத்துகின்றனர். இவ்வாறு பயன்படுத்தப்பட்ட இரு வாகனங்கள் நொய்டாவின் ஒரு சோதனைச் சாவடியில் சமீபத்தில் அடுத்தடுத்து வந்து சிக்கிக்கொண் டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x