Published : 16 Sep 2016 08:40 AM
Last Updated : 16 Sep 2016 08:40 AM

தமிழக முழு அடைப்பின் போது கன்னடர்களுக்கு பாதுகாப்பு தேவை: ஜெயலலிதாவுக்கு சித்தராமையா கடிதம்

கர்நாடக முதல்வர் சித்தராமையா தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் கன்னடர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், கர்நாடகா வில் கடந்த 12-ம் தேதி கொந் தளிப்பை ஏற்படுத்தியது. இதை யடுத்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்ட போதும், துரதிருஷ்ட வசமாக வன்முறை நிகழ்ந்துவிட்டது.

குறுகிய நேரத்தில் வன்முறை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, 300-க்கும் மேற்பட்ட‌ வன்முறையாளர் களைக் கைது செய்திருக்கிறோம். மீண்டும் வன்முறை பரவாமல் இருக்க கர்நாடகாவில் தீவிர நட வடிக்கைகளை எடுத்துள்ளோம். தற்போது தமிழகத்தில் முழு அடைப்பு நடைபெறுவதால் அங் குள்ள கன்னடர்களுக்கும், அவர் களது உடைமைகளுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படக்கூடாது. கன்னட மக்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும். இவ்வாறு சித்தராமையா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதனிடையே நேற்று காவிரி வழக்கு தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட நிபுணர்களுடன் சித்த ராமையா ஆலோசனை நடத்தினார். சித்தராமையாவின் இல்லத்தில் நடந்த இந்த கூட்டத்தில் சட்ட அமைச்சர் டி.பி.ஜெயசந்திரா, நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் ஆகியோரும் பங்கேற்ற னர். ஓய்வு பெற்ற நீதிபதிகளான ராஜேந்திர பாபு, ராம்ஜோய்ஸ், என்.குமார், சதாசிவா, விஸ்வநாத ஷெட்டி மற்றும் முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞர்கள் பி.வி.ஆச்சார்யா, மதுசூதன் நாயக், அசோக் ஹாரனஹள்ளி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x