Last Updated : 30 Dec, 2016 01:27 PM

 

Published : 30 Dec 2016 01:27 PM
Last Updated : 30 Dec 2016 01:27 PM

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிலக்கரி சுரங்க விபத்தில் 10 தொழிலாளர்கள் பலி

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 10 தொழிலாளர்கள் பலியாகினர். 2 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஜார்க்கண்ட் மாநிலம், கொட்டா மாவட்டத்தில் கோல் இந்தியாவின் துணை நிறுவனமான ஈஸ்டர்ன் கோல் பீல்ட்ஸ் சுரங்கம் இயங்கி வருகிறது. இதில், ராஜ்மஹல் சுரங்க விரிவாக்கத் திட்டத்துக்கான பணிகள் நடந்து வருகின்றன.

நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில், 2-வது ஷிப்ட் சுரங்கப் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது, திடீரென சுரங்கத்தின் மேற்பரப்பு சரிந்தது. இதில் புதைந்த தொழிலாளர்களை மீட்கும் பணி நள்ளிரவையும் கடந்து மேற்கொள்ளப்பட்டது.

இதில், 10 தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. 2 தொழி லாளர்கள் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய சுரங்கத் துறை தலைமை இயக்குநரகம் மற்றும் கோல் இந்தியா சார்பில் உயர் மட்டக் குழு விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளதாக ஈஸ்டர்ன் கோல் பீல்ட்ஸ் நிறுவன தலைவர் ஆர்.ஆர்.மிஷ்ரா தெரிவித்தார்.

விபத்தில் பலியானவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, நிலக்கரி துறை அமைச்சர் பியூஷ் கோயல், ஜார்க்கண்ட் முதல்வர் ரகுபர் தாஸ், மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர்.

தொழிலாளர் நஷ்டஈடு சட்டத் தின் கீழ், பலியான சுரங்கத் தொழி லாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந் தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும் என, முதல்வர் ரகுபர் தாஸ் அறிவித்துள்ளார். ஈஸ்டர்ன் கோல்பீல்டு நிறுவனமும் தலா ரூ.5 லட்சம் நிவாரண உதவி அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x