Published : 03 Jul 2017 07:35 AM
Last Updated : 03 Jul 2017 07:35 AM

சுவிஸ் வங்கி முதலீட்டில் இந்தியாவுக்கு 88-வது இடம்

சுவிட்சர்லாந்து வங்கிகளில் பணம் வைத்திருப்பவர்களின் பட்டியலில் 88-வது இடத்தில் இந்தியா இருக்கிறது. இங்கிலாந்து தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு இறுதி நிலவரத்தை சுவிட்சர்லாந்தின் தேசிய வங்கி வெளியிட்டிருக் கிறது. கடந்த 2015-ம் ஆண்டு இந்தியா 75-வது இடத்தில் இருந்தது. அதற்கும் முந்தைய ஆண்டு 61-வது இடத்தில் இருந்தது. கடந்த 2007-ம் ஆண் டுக்கு முன்பு வரை இந்த பட்டியலில் 50 இடத்துக்குள் இந்தியா இருந்தது. அதிகபட்ச மாக 2004-ம் ஆண்டு 37-வது இடத்தில் இந்தியா இருந்தது.

சுவிட்சர்லாந்து வங்கிகளில் வெளிநாட்டவரின் முதலீடு 1.42 லட்சம் கோடி சுவிஸ் பிராங்க் ஆகும். இதில் 25 சதவீதம் இங்கிலாந்து நாட்டவர்களின் முதலீடு ஆகும். இங்கிலாந்துக்கு அடுத்து 14 சதவீதத்துடன் அமெரிக்கா 2-ம் இடத்தில் உள்ளது. இந்த இரு நாடுகளை தவிர வேறு எந்த நாடுகளுக்கும் இரட்டை இலக்க பங்கு இல்லை. அடுத்தடுத்த இடங்களில் மேற்கிந்திய தீவுகள், பிரான்ஸ், பஹமாஸ், ஜெர்மனி, ஜெர்சே, ஹாங்காங் மற்றும் லக்ஸம்பர்க் நாடுகள் உள்ளன.

இந்தியா 88-வது இடத்தில் உள்ளது. இந்தியர்களின் பங்கு 0.04 சதவீதமாகும். முதலீடு செய்துள்ள தொகை சுமார் ரூ.4,500 கோடி. ரஷ்யா 19-வது இடத்திலும், சீனா 25-வது இடத்திலும், பிரேசில் 52-வது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா 61-வது இடத்திலும் உள்ளன. இந்த பட்டியலில் பாகிஸ்தான் 71-வது இடத்தில் இருக்கிறது.

மொரிஷியஸ், ஈரான், மொராக்கோ, கென்யா, நைஜி ரீயா, கஜகஸ்தான், உக்ரைன், அங்கோலா, பிலிப்பைன்ஸ், மலேசியா, இந்தோனேஷியா, கனடா மற்றும் மெக்ஸிகோ ஆகிய நாடுகள் இந்த பட்டியலில் இந்தியாவைவிட மேலே உள்ளன.

வங்கதேசம் 89-வது இடத்தி லும், நேபாளம் 150-வது இடத்தி லும், இலங்கை 151-வது இடத்தி லும் பூடான் 282-வது இடத்திலும் உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x