Last Updated : 03 Jul, 2017 03:47 PM

 

Published : 03 Jul 2017 03:47 PM
Last Updated : 03 Jul 2017 03:47 PM

சக்கர நாற்காலிகள், பிரெயில் டைப்ரைட்டர்கள் மீது ஜிஎஸ்டி வரி: ராகுல் கண்டனம்

மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் சக்கர நாற்காலிகள், பிரெய்ல் டைப்ரைட்டர்கள் போன்ற உபகரணங்கள் மீது வரிவிதிக்கப்பட்டுள்ளதற்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் இத்தகைய பொருட்கள் மீது 5% முதல் 18% வரி விதிக்கப்பட்டுள்ளது சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள மக்களின் மீது மத்திய அரசின் அக்கறையின்மையையே காட்டுகிறது எனக் கூறியுள்ளார். தனது அதிகரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் நாடு முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளை பெருந்துயரத்துக்கு உள்ளாக்கும் இந்த வரியை உடனடியாக அரசு திரும்பப் பெற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதேபோல் காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்திலும் ஜிஎஸ்டி விதிப்பை கிண்டல் செய்து ட்வீட்கள் பதிவிடப்பட்டுள்ளன. #GSTTamasha என்ற ஹேஷ்டேக் கீழ் பதிவிடப்பட்டுள்ள ட்வீட் ஒன்றில், "மோடி அரசு அவசர கதியில் ஜிஎஸ்டியை விதித்து அரசாங்கத்தின் ஆதரவு யாருக்கு அதிகம் தேவைப்படுகிறதோ அவர்களை புறக்கணித்துள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x