Published : 26 Jan 2015 12:09 PM
Last Updated : 26 Jan 2015 12:09 PM

குடியரசு தின விழாவில் 6 முதன்முறை நிகழ்வுகள்

டெல்லியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் 6 நிகழ்வுகள் முதன் முறையாக நடை பெற்றுள்ளன.

அமெரிக்க அதிபர் வருகை

இந்திய குடியரசு தினவிழாவின் சிறப்பு விருந்தினராக பராக் ஒபாமா பங்கேற்றார். அமெரிக்க அதிபர் ஒருவர் இந்தியக் குடியரசு தினவிழாவில் பங்கேற்றது இதுவே முதன்முறை. அமெரிக்க அதிபர் ஒருவர் 2-வது முறையாக இந்தி யாவுக்கு விஜயம் செய்வதும் இதுவே முதன்முறை.

பாதுகாப்பு நடைமுறைகளை மீறிய ஒபாமா

குடியரசு தின விழாவில் சுமார் 2 மணிநேரத்துக்கும் அதிக மாக திறந்த வெளியில் அமர்ந்த படி கண்டுகளித்தார் ஒபாமா. அமெரிக்க அதிபருக்கான பிரத் யேக பாதுகாப்புப் படையின் விதிமுறைகளின் படி, அதிபர் 45 நிமிடங்களுக்கு மேல் திறந்த வெளி நிகழ்ச்சியில் பங்கேற்கக் கூடாது என்பது கட்டாயம். இதுவரை எந்த வொரு திறந்தவெளி நிகழ்ச்சி யிலும் அமெரிக்க அதிபர் 40 நிமிடங்களுக்கு மேல் பங்கேற்ற தில்லை. அமெரிக்க அதிபர் ஒருவர் சுமார் 2 மணி நேரத்துக்கு மேல் திறந்த வெளி நிகழ்ச்சியில் பங்கேற்றது இதுவே முதல் முறை.

பீஸ்ட் காரில் ஒபாமா

இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கும் வெளிநாட்டுத் தலைவர்கள், குடியரசுத் தலை வருடன் குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து அவரது வாக னத்தில்தான் வருவது வழக்கம். ஆனால், ஒபாமா அவரின் பிரத் யேக பாதுகாப்புகாரான பீஸ்ட் டையே பயன்படுத்தினார். குடிய ரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தனியாக தனது காரில் வந்தார்.

வீராங்கனைகளின் அணிவகுப்பு

ராணுவ அணி வகுப்பின் போது, இதுவரை பெண்கள் மட்டும் கொண்ட படைப்பிரிவு தனியாக அணிவகுப்பில் பங்கேற்றதில்லை. இருபாலரும் கலந்த அணிவகுப்பு மட்டுமே நடைபெறும், முதன்முறை யாக முப்படைகளைச் சேர்ந்த பெண் அதிகாரிகள், வீராங் கனைகள் மட்டும் கொண்ட அணிவகுப்பு வீர நடைபோட்டது கண்கொள்ளாக் காட்சியாகவும் பெருமிதமாகவும் இருந்தது.

தெலங்கானாவின் அரங்கேற்றம்

நாட்டின் 29-வது மாநிலமாக தெலங்கானா உருவானபின் வரும் முதல் குடியரசு தினம் என்பதால், அம்மாநிலம் சார்பில் அலங்கார ஊர்தி அணிவகுப்பு நடைபெற்றது. தெலங்கானா மாநிலம் பங்கேற்றது இதுவே முதன் முறை. கோல்கொண்டா மகாகாளி ஆலயத்தில் தொடங்கி நடத்தப்படும் பிரசித்தி பெற்ற பொனலு திரு விழாவை தன் அலங்கார ஊர்தியில் முன்னிறுத்தியிருந்தது தெலங்கானா மாநிலம்.

போர் விமானங்கள்

இந்த ஆண்டு ராணுவ அணிவகுப்பில், நீண்ட தூர கடல்பகுதி கண்காணிப்பு மற்றும் நீர்மூழ்கி எதிர்ப்பு போர் விமானமான பி-81 மற்றும் அதி நவீன மிக்-29 கே போர்விமானங்கள் காட்சியில் இடம்பெற்றன. இவ்விமானங்கள் அணிவகுப்பில் இடம்பெற்றது இதுவே முதன்முறை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x