Last Updated : 16 May, 2016 10:37 AM

 

Published : 16 May 2016 10:37 AM
Last Updated : 16 May 2016 10:37 AM

எல்லை கிராம மக்களுக்கு மர்ம தொலைபேசி அழைப்புகள்: ராணுவ நடமாட்டத்தை அறிய சீனா முயற்சியா?- உஷார் நிலையில் இந்திய வீரர்கள்

இந்திய எல்லைப் பகுதியில் சீனா ராணுவத்தை குவித்து வருவதாக அமெரிக்கா எச்சரித்துள்ள நிலையில், எல்லைப்புற கிராம மக்களுக்கு மர்ம தொலைபேசி அழைப்புகள் வந்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

கடல் மட்டத்தில் இருந்து 13,500 அடி உயரத்தில் இந்திய, சீன எல்லைப் பகுதியில் அமைந்துள் ளது துர்புக் கிராமம். இந்த கிராமத் தலைவருக்கு அண்மையில் ஒரு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் எதிர்முனையில் இருந்து பேசியவர்கள் படைகளின் நடமாட்டம், உள்கட்டமைப்பு, சாலை வசதி ஆகிய தகவல்களை கேட்டுள் ளனர். இதனால் அவர்கள் பாகிஸ் தான் அல்லது சீன ராணுவத்தினராக இருக்கலாம் என சந்தேகம் அடைந்த அந்த கிராமத் தலைவர் இது குறித்து இந்திய ராணுவ அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார்.

அதன் அடிப்படையில் ராணுவ அதிகாரிகள் கிராமத்தில் உள்ள மற்றவர்களிடமும் விசாரணை நடத்தினர். அதில் அனைவருக்குமே இத்தகைய மர்ம தொலைபேசி வந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து இந்திய ராணுவ நடமாட்டத்தை அறிந்து கொள்ள சீனா முயற்சிக்கிறது என அதிகாரி கள் சந்தேகிக்கின்றனர். இதன் காரணமாக மர்ம தொலைபேசி அழைப்புகள் வந்தால் எந்தவொரு தகவலையும் வெளியிட வேண்டாம் என அவர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.

அத்துடன் அந்த தொலைபேசி எண்கள், எதிர்முனையில் பேசும் நபர்கள் தொடர்பான விவரங்களை உடனடியாக அருகில் உள்ள இந்திய ராணுவ மையத்தில் தெரிவிக்கும்படி பொதுமக்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்திய எல்லைப் பகுதியில் சீனா அளவுக்கு அதிகமாக துருப்புகளை குவித்து வருவதாக அமெரிக்கா எச்சரித்தது. இதையடுத்து எல்லை யில் ராணுவத்தினர் உஷார்படுத்தப் பட்டுள்ளனர்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x