Last Updated : 31 Jan, 2017 09:28 AM

 

Published : 31 Jan 2017 09:28 AM
Last Updated : 31 Jan 2017 09:28 AM

எருமைக்கு பதில் வேகமாக ஓடும் குதிரையை பயன்படுத்தலாமே: கர்நாடக உயர் நீதிமன்றம் ஆலோசனை

கர்நாடக மாநிலம் ம‌ங்களூரு வில் வாழும் துளு மக்கள் கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக கம்பளா போட்டியை நடத்தி வந்தனர்.

இந்த போட்டியின் போது விவசாயிகள் வளர்க்கும் எருமை காளைகளை வயலில் வேகமாக‌ விட்டு விரட்டி செல்வார்கள். ஜல்லிக்கட்டை போல கம்பளா போட்டியிலும் எருமைகள் துன்புறுத்தப்படுவ தாகக் கூறி கர்நாடக நீதிமன்றம் தடை விதித்தது.

இந்நிலையில் தமிழகத்தில் அவசர சட்டம் இயற்றி ஜல்லிக் கட்டு நடத்தப்படுவதைப் போல கர்நாடகாவிலும் கம்பளா போட்டியை நடத்த அனுமதிக்க வேண்டும் என கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இம்மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சுப்ரோ கமல் முகர்ஜி, நீதிபதி பூதிஹால் அடங்கிய அமர்வு, “கம்பளா போட்டி குறித்து நடந்துவரும் போராட்டங்களை கவனித்து வரு கிறோம். ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது. அதுவரை இம் மனுவை மேலும் 2 வாரத்திற்கு ஒத்தி வைக்கிறோம்.

கம்பளா போட்டியில் எருமை கள் பயன்படுத்தப்படுவது ஆச்சர்ய மாக இருக்கிறது. ஏனென்றால் எருமைகள் ஓட்ட பந்தயத்துக்கு உகந்த விலங்கு அல்ல. அதற்கு பதில்‌ குதிரைகளைப் பயன்படுத்த லாமே?” என கருத்து தெரிவித்தனர். இதற்கு மங்களூருவில் எருமை வளர்க்கும் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x