Published : 23 May 2015 08:21 AM
Last Updated : 23 May 2015 08:21 AM

ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க‌ புதிய அரிசி: சத்தீஸ்கர் விஞ்ஞானிகள் சாதனை

பழங்குடி மக்கள் அதிகமாக உள்ள சத்தீஸ்கர் மாநிலத்தில் நிலவும் ஊட்டச்சத்து குறைபாட்டைப் போக்க புதிய அரிசி ரகம் ஒன்றை அம்மாநில விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

இந்தப் புதிய ரகத்துக்கு 'சத்தீஸ்கர் ஸிங்க் ரைஸ் 1' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தியாவில், துத்தநாகம் கொண்டு உயிரி ஊட்டம் கூட்டப்பட்ட முதல் அரிசி ரகம் இதுவேயாகும்.

புதிய ரக விதைகளை அறிமுகப் படுத்தும் மாநில ஆணையத்தால் கடந்த மார்ச் மாதம் இந்த அரிசி ரகம் அறிமுகப்படுத்தப்பட்டது. அடுத்து வரும் பருவத்தில் இந்த ரகத்தைப் பயிர் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோன்று இந்திரா காந்தி வேளாண்மைப் பல்கலைக்கழகத் தைச் சேர்ந்த பேராசிரியர் கிரிஷ் சந்தெல் தலைமையில் உருவாக்கப் பட்ட 2 புதிய அரிசி வகைகளில் ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதுகுறித்து சந்தெல் கூறும் போது, "தற்சமயம் இந்தப் புதிய ரகத்தின் விதைகள் 100 கிலோ எங்களிடம் உள்ளன. இவற்றை 10 ஏக்கர்களில் பயிரிட்டு இதன் கையிருப்பை அதிகப்படுத்த திட்ட மிட்டுள்ளோம். இந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் இந்த விதைகளை மாநிலத்தில் உள்ள‌ சுமார் 5 ஆயிரம் விவசாயி களுக்கு வழங்க உள்ளோம். அடுத்த பருவத்தில் இருந்து பயிரிட முடிவு செய்துள்ளோம்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x