Last Updated : 30 Dec, 2016 10:33 AM

 

Published : 30 Dec 2016 10:33 AM
Last Updated : 30 Dec 2016 10:33 AM

உயர் பாதுகாப்பு நடைமுறைகளுடன் சமூக நலவாழ்வு மையங்களை பலப்படுத்த திட்டம்

சமூக நலவாழ்வு மையங்களில் தூய்மை, சுற்றுப்புற சுகாதாரத்தை உறுதி செய்யவும், கிருமித் தொற்று ஏற்படாத வகையில் உயர் பாதுகாப்பு நடைமுறை களைப் பின்பற்றவும் புதிய திட்டத்தை மத்திய அரசு நேற்று அறிமுகப்படுத்தியது.

தூய்மையும், ஆரோக்கியமும் எங்கும் நிறைந்திருக்க வேண்டு மென்ற நோக்கில், ‘ஸ்வச் ஸ்வஸ்த் சர்வத்ரா’ என்றழைக்கப்படும் இத்திட்டத்தின் மூலம், நாடு முழுவதும் திறந்தவெளி கழிப் பிடம் இல்லாத 708 மண்டலங் களில் அமைந்துள்ள சமூக நலவாழ்வு மையங்களுக்கு ரூ.10 லட்சம் நிதி வழங்கப்படும்.

இந்நிதியைப் பயன்படுத்தி சமூக நல வாழ்வு மையங்கள், உட்புறத்திலும், வெளிப்புறத்திலும் தூய்மை மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளவேண்டும். குடிநீர் மற்றும் துப்புரவு, மனித வள மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவற்றுடன் இணைந்து மத்திய சுகாதார அமைச்சகம் இத் திட்டத்தை அறிமுகப்படுத்தி யுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டா கூறும் போது, ‘திறந்தவெளி கழிப் பிடமில்லாத 708 மண்டலங்களில் உள்ள சமூக நல வாழ்வு மையங்கள் காயகல்ப் விருது பெறும் அளவுக்கு தூய்மை மற்றும் ஆரோக்கிய சூழலில் தரம் உயர வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கம்.

அதேசமயம் காயகல்ப் விருதுபெற்ற பொது சுகாதார மையங்கள் அமைந்துள்ள மண்டலங்களைத் திறந்தவெளி கழிப்பிடமில்லா பகுதியாக மாற்ற, கிராம பஞ்சாயத்துகளுக்கு குடிநீர் மற்றும் சுற்றுப்புற சுகாதாரத் துறை உதவும்’ என்றார்.

டெல்லியில் நடந்த திட்ட அறிமுக நிகழ்ச்சியில் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரும் கலந்துகொண்டு பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x