Last Updated : 01 Jan, 2017 11:52 AM

 

Published : 01 Jan 2017 11:52 AM
Last Updated : 01 Jan 2017 11:52 AM

உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியில் அகிலேஷ் நீக்கம் ரத்தானதால் காங்கிரஸ் ஏமாற்றம்

உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியில் இருந்து அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் நீக்கப் பட்டது மறுநாள் ரத்து செய்யப்பட்ட தால் காங்கிரஸ் கட்சி ஏமாற்றம் அடைந்துள்ளதாக தெரியவந் துள்ளது.

உ.பி.யில் ஆளும் சமாஜ்வாதி கட்சியின் தலைவராக முலாயம்சிங் யாதவ் இருந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தனது மகனும் மாநில முதல்வருமான அகிலேஷ் யாதவை 6 ஆண்டுகளுக்கு கட்சியில் இருந்து நீக்கினார். தந்தைக்கு போட்டியாக அகிலேஷ் வேட்பாளர் பட்டியில் வெளியிட்டதே இதற்கு காரணமாகக் கூறப்பட்டது.

முன்னதாக, காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கலாம் எனவும் அக்கட்சிக்கு 100 தொகுதிகளுடன் துணை முதல்வர் பதவியும் அளிக்க லாம் என கட்சியில் அகிலேஷ் வலியுறுத்தி வந்ததாகக் கூறப்படு கிறது. இந்நிலையில் சமாஜ்வாதி கட்சியில் இருந்து அகிலேஷ் நீக் கப்பட்ட அறிவிப்பு உ.பி. அரசிய லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யது. இந்நிலையில் சமாஜ்வாதியில் இருந்து நீக்கப்பட்ட அகிலேஷ், ராஷ்ட்ரிய லோக் தளத்தின் (ஆர்எல்டி) இளம் தலைவர் ஜெயந்த் சவுத்ரி (அஜீத் சிங்கின் மகன்) ஆகி யோருடன் இணைந்து தேர்தலை சந்திக்க ராகுல் காந்தி விரும்பினார். இதனால் அகிலேஷின் நீக்கம் காங்கிஸ் கட்சிக்கு மகிழ்ச்சியை அளித்தது.

மேற்கு உ.பி.யில் ஆர்எல்டி பலம் வாய்ந்த கட்சியாக இருப்ப தால் ராகுல் உள்ளிட்ட மூன்று இளம் தலைவர்கள் கூட்டணி வெற்றிக் கூட்டணியாக இருக்கும் என காங்கிரஸ் கருதியது. அகிலேஷ் நீக்கப்பட்ட பின் கருத்து கூறிய காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், “அரசியல் என்பது வாய்ப்புகளின் விளையாட்டு. எனவே அரசியலில் எதுவும் நிகழும்” என்றார். ஆனால் அகிலேஷின் நீக்கம் மறுநாளே ரத்தானதால் காங்கிரஸ் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளது.

இது குறித்து ‘தி இந்து’விடம் காங்கிரஸ் தேசிய நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, “உ.பி.யில் தனது வளர்ச்சிப் பணிகளை நம்பி அகிலேஷ் போட்டியிடுவதால், அவருடன் கூட்டணி சேர ராகுல் விரும்புகிறார். இது தொடர்பாக அகிலேஷுக்கும் காங்கிரஸின் உ.பி. தேர்தல் பொறுப்பாளர் பிரியங்கா வுக்கும் இடையே நடைபெற்ற ரகசிய பேச்சுவார்த்தையிலும் உடன் பாடு ஏற்பட்டது. ஆனால் இதை முலாயமின் தம்பி சிவபால் யாதவ் ஏற்காமல் இருந்தார். இந்நிலையில் அகிலேஷ் நீக்கத்தால் கூட்டணி உறுதி என மகிழ்ச்சி அடைந்தோம். ஆனால் இந்த நீக்கம் மறுநாள் ரத்தானது ஏமாற்றம் அளித்துள்ளது” என்று தெரிவித்தனர்.

மொத்தம் 403 தொகுதிகளைக் கொண்ட உ.பி.யில் சமாஜ்வாதி கட்சிக்கு 224 எம்எல்ஏக்கள் உள்ள னர். இவர்களில் 171 பேர் அகிலேஷை ஆதரிக்கின்றனர். ஒரு வேளை சட்டப்பேரவையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் அகிலேஷுக்கு ஏற்பட்டால் காங்கிரஸ் கட்சியின் 28 எல்எல்ஏக்கள், ஆர்எல்டியின் 9 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் (மொத்தம் 208) அவர் வெற்றி பெறுவார். உ.பி. தேர்தல் தேதி எந்நேரமும் அறிவிக்கப்படலாம் என்பதால் புதிய கட்சி தொடங்க அவகாசம் இல்லை. எனினும் சமாஜ்வாதி கட்சியின் சைக்கிள் சின்னம் முடக்கப்படும் வாய்ப்பு இருந்தது. எனவே காங்கிரஸின் கை சின்னத்தில் போட்டியிடவும் அகிலேஷ் தயாராக இருந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ள அகிலேஷ், தொடர்ந்து காங்கிரஸுட னான கூட்டணிக்கு வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x