Published : 28 Jun 2016 09:30 AM
Last Updated : 28 Jun 2016 09:30 AM

இந்திய பெண்களில் 3-ல் ஒருவருக்கு 18 வயதுக்குள் திருமணம் நடக்கிறது: 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் தகவல்

இந்தியப் பெண்களில் கிட்டத்தட்ட 3-ல் 1 பகுதியினர் 18 வயதுக்கு முன் திருமணம் ஆனவர்களாக இருப்பதாக 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

2011-ம் ஆண்டு மக்கள் தொகை புள்ளிவிவரம் நேற்று வெளியிடப் பட்டது. இதன்படி இந்திய ஆண் களில் சுமார் 6 சதவீதம் பேரும், பெண்களில் 31 சதவீதத்துக்கு மேற்பட்டோரும் 18 வயதுக்கு முன் திருமணம் ஆனவர்களாக உள்ளனர்.

நாட்டில் குழந்தை திருமணத் துக்கு எதிராக அரசு இடைவிடாத பிரச்சாரம் மேற்கொண்டு வரும் போதிலும் அதை தடுக்க முடிய வில்லை என்பதையே இந்த புள்ளிவிவரம் காட்டுகிறது. இதில் ஏறக்குறைய 15 சதவீத பெண்கள் 16 வயதுக்கு முன்பே திருமணம் ஆனவர்களாக இருப்பது கவலை அளிக்கிறது. இதுபோல் 40 சதவீத ஆண்கள் சட்டப்பூர்வ திருமண வயதுக்கு (21) முன்னரே திருமணம் ஆனவர்களாக உள்ளனர்.

இது தொடர்பாக டெல்லியைச் சேர்ந்த அரசியல் விமர்சகர் மனிஷா பிரியம் கூறும்போது, “பாலின சமத்துவம் தொடர்பான நமது முயற்சிகள் ஏமாற்றம் அளிப் பதையே இந்த புள்ளிவிவரம் காட்டு கிறது. அதிக பெண்கள் தற்போது கல்வி பயில்கின்றனர். என்றா லும் அவர்களுக்கு சட்டப்பூர்வ வயதில் திருமணம் செய்யப் படுவதை உறுதிப்படுத்த நாம் தவறிவிட்டோம். சமூகரீதியில் நாம் எந்த அளவுக்கு பழமைவாத எண்ணம் கொண்டவர்களாக உள் ளோம் என்பதையே இது காட்டு கிறது” என்றார்.

தொழில் அடிப்படையில் ஆராய்ந்தால், 18 வயதுக்குள் திருமணம் ஆன பெண்களில் விவசாயிகள், விவசாய தொழிலா ளர்கள், கடைநிலை தொழிலாளர் களின் குடும்பங்களை சேர்ந்தவர் களே அதிகம் உள்ளனர். ஆண்களி லும் 18 வயதுக்குள் திருமணம் ஆனவர்களில் இந்தப் பிரிவினரே அதிகமாக உள்ளனர்.

18 வயதுக்குள் திருமணம் ஆன பெண்கள் மற்றும் ஆண்கள் எண்ணிக்கையில் ராஜஸ்தான் முதலிடத்தில் உள்ளது. இம்மாநிலத் தில் திருமணம் ஆன பெண்களில் 45 சதவீதம் பேர் 18 வயதுக்குள் திருமணம் ஆனவர்களாக உள்ளனர். இதுபோல் 10 சதவீத ஆண்கள் 18 வயதுக்குள் திருமணம் ஆனவர்களாக இருக்கின்றனர்.

ஆந்திரா, மத்தியப் பிரதேசம் ஆகிய 2 மாநிலங்களிலும் 40 சதவீத பெண்கள் 18 வயதுக்கு முன் திருமணம் ஆனவர்களாக உள்ளனர். பிஹார், ஹரியாணா, உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் 33 சதவீதத்திற்கும் மேற்பட்ட பெண்கள் 18 வயதுக்கு முன் திருமணம் ஆனவர்களாக உள்ளனர்.

இந்நிலையில் 2011-ம் ஆண்டு மக்கள் தொகை புள்ளிவிவரப்படி பல்வேறு தொழில்களில் ஈடுபட் டுள்ள ஆண் மற்றும் பெண்களின் சராசரி திருமண வயது, 2001-ஐ காட்டிலும் உயர்ந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x