Published : 08 Nov 2016 09:25 AM
Last Updated : 08 Nov 2016 09:25 AM

அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உதவியால் இந்திய மணமகனை கரம்பிடித்த பாகிஸ்தான் மணமகள்

ராஜஸ்தான் மணமகனைத் திருமணம் செய்வதற்கு விசா கிடைக்காமல் தவித்த பாகிஸ்தான் மணமகளுக்கு, அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உதவி செய்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரைச் சேர்ந்தவர் நரேஷ் திவானி. பாகிஸ்தானின் கராச்சி நகரைச் சேர்ந்தவர் பிரியா பச்சானி. இருவரும் திருமணம் செய்ய நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது. ஆனால், மணமகள் பிரியா மற்றும் அவரது குடும்பத்தினர் இந்தியா வருவதற்கு விசா கிடைப்பதில் கால தாமதம் ஏற்பட்டது.

திருமணத்துக்காக நரேஷ் கடந்த 3 ஆண்டுகளாக காத்திருந் தார். கடைசியில் நவம்பர் 7-ம் தேதி (நேற்று) திருமண தேதியும் முடிவானது. ஆனால் பாகிஸ் தானில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்து பிரியா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு விசா கிடைக்க வில்லை.

கடந்த ஒரு மாதமாக திருமணம் நடக்குமோ நடக்காதோ என்ற பதற்றத்தில் இரு வீட்டாரும் இருந்தனர். இந்நிலையில், விசா பிரச்சினையில் தலையிட்டு உதவி செய்யும்படி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு ட்விட்டரில் வேண்டுகோள் விடுத்தார் நரேஷ்.

அதை பார்த்த சுஷ்மா, மணமகள் பிரியா மற்றும் குடும்பத்தினருக்கு உடனடியாக விசா வழங்க உத்தர விட்டார். அதன்படி மணமகள் உட்பட 35 பேருக்கு பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் விசா வழங்கியது. அதைப் பெற்ற பிறகு கடந்த ஞாயிற்றுக்கிழமை மணமகள் பிரியா தனது குடும்பத் தினருடன் வந்தார். பின்னர் திருமண நிகழ்ச்சிகள் நடந்தன. திட்டமிட்டபடி நேற்று அவர்களுக்கு திருமணமும் இனிதே நடந்தது.

இதுகுறித்து நரேஷ் கூறும் போது, ‘‘அமைச்சர் சுஷ்மா விரைந்து எங்களுக்கு உதவி செய்ததற்கு நன்றி. மணமகள் உட்பட 35 பேரும் ஜோத்பூர் வரு வதற்கு உடனடியாக விசா வழங் கப்பட்டுள்ளது’’ என்றார். பிரியா கூறும்போது, ‘‘திட்டமிட்டபடி எங்கள் திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது’’ என்றார்.

மணமகன் நரேஷின் தந்தை கன்னய்யா லால் திவானி கூறும் போது, ‘‘திருமணத்துக்கு இந்தியா வருவதற்காக மணமகள் குடும்பத் தார் முன்கூட்டியே விசாவுக்கு விண்ணப்பித்தனர். அவர்கள் 35 பேர் தங்குவதற்கு எல்லா ஏற் பாடுகளும் செய்ய தொடங்கினேன். விசா கிடைப்பத்தில் தாமதம் ஏற் பட்டதால், எல்லா ஏற்பாடுகளையும் நிறுத்திவிட்டு பதற்றத்துடன் இருந்தேன். ஆனால், இதுபோன்ற சிக்கலான விஷயங்களில் அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக கேள்விப்பட்டோம். அது எங்கள் விஷயத்திலும் உண்மையாகவே இருந்தது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x