Last Updated : 31 May, 2016 09:30 AM

 

Published : 31 May 2016 09:30 AM
Last Updated : 31 May 2016 09:30 AM

அதிரப்பள்ளி நீர்மின் திட்ட விவகாரம்: கேரள அரசு மீது ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு

அதிரப்பள்ளி-சாலக்குடி நீர்மின் திட்டத்தை செயல்படுத்த முனைப்புக் காட்டும் கேரள முதல்வர் பினராயி விஜயனின் செயல்பாட்டை காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கடு மையாக விமர்சித்துள்ளார்.

கேரள மின் துறை அமைச்சர் கடகாம்பள்ளி சுரேந்திரன், ‘‘மார்க்சிஸ்ட் தலைமையிலான புதிய இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு சாலக்குடி ஆற்றின் குறுக்கே திட்டமிடப்பட்டுள்ள அதிரப்பள்ளி- சாலக்குடி நீர்மின் திட்டத்தை அமல் படுத்தும். இதுதொடர்பாக சுற் றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் அமைப்புகளுடன் ஆலோசித்து வருகிறோம்’’ என்று தெரிவித்தார். இதனை, முதல்வர் பினராயி விஜயன் ஆத ரித்து கருத்து தெரிவித் துள்ளார். இதற்கு முன்னாள் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். “அதிரப்பள்ளி திட்டம், சுற்றுச் சூழல் பேரழிவுக் கான மிகச்சிறப் பான திட்டம். இதைத்தான் முதல்வர் பினராயி விஜயனும், பிரதமர் மோடியும் கேரளாவுக் கும், இந்தியாவுக்கும் செய்யவிருக் கின்றனர்” என் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு-2-ல் ஜெய்ராம் ரமேஷ் வனம், சுற்றுச்சூழல் துறை அமைச் சராக இருந்தபோது 2011-ல் இத்திட்டத்துக்கு அனுமதி வழங்க மறுத்துவிட்டார்.

அப்போதைய முதன்மை வனப் பாதுகாவல் (சிசிஎப்) டி.எம். மனோகரன், இத்திட்டம் அப்ப குதியின் சுற்றுச்சூழல், உயிரின சுற்றுப்புற வாழ்வியலை பாதிக்கும் எனக்கூறி கடுமையாக எதிர்த்தார். இவர் மூன்று முதல்வர்களின் கீழ் கேரள மாநில மின்வாரிய தலைவ ராகவும் இருந்தார் என ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x