அடோப் தளத்தில் ஹேக்கர்கள் அத்துமீறல்: 29 லட்சம் வாடிக்கையாளர்களின் விவரம் திருட்டு

Published : 04 Oct 2013 16:48 IST
Updated : 06 Jun 2017 12:23 IST

அடோப் வலைத்தளத்துக்குள் அத்துமீறிய ஹேக்கர்கள் (தாக்காளர்கள்), அந்நிறுவனத்தின் 29 லட்சம் வாடிக்கையாளர்களின் விவரங்களைத் திருடியுள்ளனர்.

போட்டோஷாப், அக்ரோபாட் உள்ளிட்ட பல்வேறு மென்பொருள்களை வழங்கி வரும் அடோப் நிறுவனத்தின் தலைமைப் பாதுகாப்பு அலுவலர் பிராட் ஆர்கின் வெளியிட்ட தகவலில், “வாடிக்கையாளர்களின் கணக்குகளை இயக்கியுள்ள ஹேக்கர்கள், அதன் பாஸ்வேர்டுகளையும் இயக்கியுள்ளனர். 29 லட்சம் வாடிக்கையாளர்களின் விவரங்களிலிருந்து சில விவரங்கள் நீக்கப்பட்டுள்ளதாக நம்புகிறோம்.

வாடிக்கையாளர்களின் பெயர், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு விவரங்கள், காலாவதி தேதிகள், தயாரிப்புகளை வாங்குவதற்கான வேண்டுகோள்கள் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை ஹேக்கர்கள் நீக்கியுள்ளனர்.

இது தொடர்பாக நிறுவனத்துக்கு உள்ளேயும், வெளியேயும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சட்டப்பூர்வ நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

வாடிக்கையாளர்கள் தங்கள் பாஸ்வேர்டுகளை மாற்றியமைக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடோப் தொடர்பான பணப்பரிவர்த்தனைகள் குறித்து வங்கிகளும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். சைபர் தாக்குதல் என்பது இன்றைய வர்த்தக உலகத்திற்கு துரதிருஷ்டவசமான ஒன்று என்று பிராட் ஆர்கின் குறிப்பிட்டுள்ளார்.

Keywords
More In
This article is closed for comments.
Please Email the Editor