Last Updated : 23 Feb, 2019 10:10 AM

 

Published : 23 Feb 2019 10:10 AM
Last Updated : 23 Feb 2019 10:10 AM

பிற மொழி நூலகம்:  கிளர்ச்சியின் பின்னே!

நேர்மை உணர்வு மிக்க ஒரு மலைக் கிராமத்து இளைஞன், தான் எதிர்கொள்ளும் சம்பவங்களால் ஒரு கிளர்ச்சி வீரனாக உருமாறுகிறான். அதன் பிறகு, ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறைகளால் வேட்டையாடப்படும் பின்னணியில் அவனுக்கும் அவனது 12 வயது தம்பிக்கும் இடையேயான உறவு ஒருபுறம்; இத்தகைய கிளர்ச்சியாளர்களை அடக்கி ஒடுக்கவே நியமிக்கப்பட்டவர்களில் ஒருவரான காவல் அதிகாரியின் குழப்பமான மனநிலை ஒருபுறம் என இந்த மூவரின் உணர்வுகள் மோதித் தெறிக்கும் சமூகச் சூழலை மிகுந்த உணர்ச்சிப்பாங்குடன் சித்தரிக்கிறது இந்த நாவல். வடகிழக்குப் பகுதியின், குறிப்பாக அசாம் மாநிலத்தில் நிலவும் பிரச்சினைகளை நமக்கு நன்கு உணர்த்தும் எழுத்து இது.

- வீ.பா.கணேசன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x