Last Updated : 16 Feb, 2019 09:24 AM

 

Published : 16 Feb 2019 09:24 AM
Last Updated : 16 Feb 2019 09:24 AM

பிறமொழி நூலகம்: அவலமே வாழ்க்கையாய்…

இண்டெராகேடிங் மை சண்டாள் லைஃப்:

அன் ஆட்டோபையாக்ரஃபி ஆஃப் அ தலித்

மனோரஞ்சன் வியாபாரி

ஆங்கிலத்தில்: சிப்ரா முகர்ஜி

சேஜ் – சம்யா

விலை: ரூ. 550

வங்க தேசத்திலிருந்து வந்த ஓர் அகதி அங்குமிங்குமாக அலைக்கழிக்கப்பட்டு, எழுத்தறிவு பெறுவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டு கையறுநிலையில் வாழும் மனநிலை எத்தகையதாக இருக்கும்? சண்டாளர் என்ற சமூக ஒடுக்குமுறையை பிறப்பிலிருந்து  இறப்பு வரை எதிர்நோக்கும் ஒருவர், மற்றவர்களாலும் மதிக்கப்படும் மனிதராக உருப்பெற எத்தனை கடும் போராட்டங்களை நடத்த வேண்டியிருக்கும்?   கைரிக்‌ஷாவில் மக்களைச் சுமந்து செல்வதைத் தன் உயிர்ப்புக்கான வழியாகப் பின்பற்றியபோதும், சிறைக் கூடத்தில் பெற்ற எழுத்தறிவைக் கொண்டு தனித்துவம் மிக்க, சமூக நோக்கம் மிக்க எழுத்தாளராகப் பரிணமித்தவர் மனோரஞ்சன் வியாபாரி.  இந்த ஆண்டு ‘தி இந்து லிட் ஃபார் லைப்’ விழாவில் அபுனைவு பிரிவில் சிறந்த நூலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது இந்நூல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x